வெற்றியே இல்ல... ஆனாலும் என்ன கட்ஸ் இருக்கு மோதி பாத்துடலாம்... தோள்தட்டும் ஒடிசா அணி
கோவா : ஐஎஸ்எல் 2020-21 தொடரின் 25வது போட்டியில் நாளை கோவாவின் ஜிஎம்சி மைதானத்தில் ஒடிசா எப்சி மற்றும் எப்சி கோவா அணிகள் மோதவுள்ளன.
இந்த தொடரில் இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள ஒடிசா எப்சி ஒரு வெற்றியையும் அடையாத நிலையில் நாளை கோவா அணியுடன் மோதவுள்ளது.
5 புள்ளிகளுடன் ஐஎஸ்எல் 2020-21 புள்ளிகள் பட்டியலில் 6வது இடத்தில் உள்ள கோவா அணிடன் ஒடிசா அணி மோதவுள்ள நிலையில் தன்னுடைய வெற்றிக்கணக்கை துவக்க வேண்டிய கட்டாயம் அந்த அணிக்கு உள்ளது.

ஒடிசா -கோவா அணிகள் மோதல்
ஐஎஸ்எல் 2020-21 தொடர் துவங்கி 20க்கும் மேற்பட்ட போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. நாளைய 25வது போட்டியில் ஒடிசா எப்சி மற்றும் எப்சி கோவா அணிகள் மோதவுள்ளன. இந்த தொடரில் இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள ஒடிசா அணி இதுவரை வெற்றியை அடையாத நிலையில் 10வது இடத்தில் உள்ளது.

5 புள்ளிகள்
இந்நிலையில் 4 போட்டிகளில் இதுவரை விளையாடியுள்ள கோவா அணி 5 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளது. இதையடுத்து இந்த இரு அணிகளுக்கிடையிலான போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. நாளை கோவாவின் ஜிஎம்சி மைதானத்தில் இந்த போட்டி நடைபெறவுள்ளது.

அதிக கோல் அடித்த வீரர்
இந்த ஐஎஸ்எல் 2020-21 தொடரில் அதிகமான கோல்களை அடித்துள்ள கோவா அணி வீரர் இகோர் ஆங்குலோ அந்த அணியின் சிறப்பான வீரராக பார்க்கப்படுகிறார். மேலும் ஜோர்ஜ் ஆர்டிஸ் மென்டோசா, பிரான்டன் பெர்னான்டஸ் மற்றும் எடு பேடியா ஆகியோரும் போட்டியில் சிறப்பான அங்கம் வகித்து வருகின்றனர்.

பிரச்சினையாக உள்ளது
இந்நிலையில் ஆங்குலோ கோல்களை அடிப்பது பிரச்சினையாக உள்ளதாக ஒடிசா அணியின் கோச் ஸ்டூவர்ட் பாக்ஸ்டர் தெரிவித்துள்ளார். அவர்கள் மிகவும் சிறப்பான டீம் என்றும் அவர்களை கோல் அடிக்க முடியாத அளவில் தடுத்து ஆடுவது முக்கியம் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications