உலகக் கோப்பைக் கால்பந்து தொடக்க விழாவில் மண்டேலா பங்கேற்பு

ஜூன் 11ம் தேதி உலகக் கோப்பை கால்பந்து போட்டி தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவும், மெக்சிகோவும் ஜோஹன்னஸ்பர்க்கில் சந்திக்கின்றன. இன்னொரு போட்டியில் பிரான்ஸும், உருகுவேயும் மோதவுள்ளன.
இதில் பிரான்ஸ்- உருகுவே போட்டியை நெல்சன் மண்டேலா காண்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
91 வயதாகும் நெல்சன் மண்டேலா, இனவெறி ஆட்சியை எதிர்த்து கடுமையாகப் போராடியவர். பல வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் பின்னர் விடுதலை செய்யப்பட்டார். நிறவெறி ஆட்சி ஒழிந்த பின்னர் நடந்த முதல் தேர்தலில் மண்டேலா வெற்றி பெற்று அதிபரானார்.
ஆப்பிரிக்கக் கண்டத்தில் முதல் முறையாக நடக்கப் போகும் உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியால் மகிழ்ச்சி அடைந்துள்ள ஆப்பிரிக்க மக்கள், மண்டேலா முதல் போட்டியைக் காண வரவுள்ளார் என்ற செய்தியால் கூடுதல் உற்சாகமடைந்துள்ளனர்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:38 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications