Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கொலம்பியாவை வீழ்த்திய பிரேசில்! 12 வருடங்களுக்கு பிறகு அரையிறுதிக்கு தகுதி!!

ரியோடி ஜெனிரோ: உலக கோப்பை கால்பந்தாட்டத்தின் கொலம்பியா அணியுடனான போட்டியில் பிரேசில் 2-1 என்ற கோல் கணக்கில் அபாரமாக வெற்றி பெற்று உள்ளூர் ரசிகர்களை நிம்மதி பெருமூச்சு விடச்செய்தது.

இந்திய நேரப்படி இன்று அதிகாலை, 1.30 மணிக்கு, நடந்த போட்டியில், பிரேசிலும், கொலம்பியாவும் மோதின. இந்த போட்டியில் வெல்லும் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும் என்பதால், தென் அமெரிக்காவை சேர்ந்த இவ்விரு நாடுகளும் மோதிய போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

தோற்கவில்லை

தோற்கவில்லை

கொலம்பியாவை பொறுத்தளவில் லீக் ஆட்டங்களில் எதிலுமே தோற்கவில்லை. 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று ராஜ நடை போட்டு நேற்றைய காலிறுதியில் பிரேசிலை எதிர்கொண்டது. அதே நேரம் பிரேசில், தனது லீக் ஆட்டங்களில் இரண்டில் வெற்றியும், ஒரு போட்டியில் டிராவும் செய்திருந்ததால் சற்று தடுமாற்றத்துடன் இருந்தது.

கேப்டன் அபாரம்

கேப்டன் அபாரம்

ஆட்டம் தொடங்கிய 7வது நிமிடத்திலேயே பிரேசிலின் கேப்டன் டி.சில்வா கோல்போட்டு தனது அணியை முன்னிலைக்கு கொண்டு வந்தார். முதல் பாதி ஆட்டத்தில் வேறு எந்த கோலும் விழாததால் பிரேசில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கிய நிலையில் 69வது நிமிடத்தில் பிரேசிலின் டேவிட் லூயிஸ் கோல் போட்டு பிரேசிலை 2-0 என்ற கணக்கில் முன்னிலைக்கு கொண்டு வந்தார்.

கிலி ஏற்படுத்திய பிரான்ஸ்

கிலி ஏற்படுத்திய பிரான்ஸ்

இதற்கு 80வது நிமிடத்தில் பதிலடி கிடைத்தது. பிரான்சு வீரர் ஜேம்ஸ் ரோட்ரிகுவஸ் கோல் போட்டு பிரேசிலுக்கு கிலி ஏற்படுத்தினார்.இதன்பிறகு எந்த அணியும் கோல் போடாததால், ஆட்ட நேர முடிவில் பிரேசில், 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றது.

12 ஆண்டுகளில் முதல் முறை

12 ஆண்டுகளில் முதல் முறை

கடந்த 12 வருடங்களில் முதன்முறையாக பிரேசில் இப்போதுதான் அரை இறுதிக்கு செல்கிறது. உலகின் தலை சிறந்த அணியாக வர்ணிக்கப்படும் பிரேசில் கடந்த மூன்று உலக கோப்பைகளிலும் சரியாக சோபிக்காத நிலையில், தனது சொந்த மண்ணில் நடக்கும் போட்டியில் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

பிரேசில்-ஜெர்மனி மோதல்

பிரேசில்-ஜெர்மனி மோதல்

கொலம்பியாவை தோற்கடித்த பிரேசிலும், பிரான்சை தோற்கடித்துள்ள ஜெர்மனியும் இந்திய நேரப்படி வரும் புதன்கிழை அதிகாலை 1.30 மணிக்கு நடைபெறும் அரையிறுதியில் பலப்பரிட்சை நடத்த உள்ளன.

பிரேசிலுக்கு பின்னடைவு

பிரேசிலுக்கு பின்னடைவு

பிரேசிலின் நட்சத்திர ஆட்டக்காரர் நெய்மார் முதுகில் ஏற்பட்ட காயத்தாலும், கேப்டன் டி.சில்வா 2 மஞ்சள் அட்டைகளை இதுவரை பெற்றுள்ளதாலும், ஜெர்மனியுடனான ஆட்டத்தில் பங்கேற்க முடியாது. இதனால் பிரேசில் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

Story first published: Saturday, July 5, 2014, 11:03 [IST]
Other articles published on Jul 5, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+