மெக்சிகோவுடனான போட்டியில் ஒரு கோல்கூட போட முடியாமல் தத்தளித்த பிரேசில்! ரசிகர்கள் அதிர்ச்சி!!
ரியோடிஜெனிரோ: 20வது உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியனாகிவிடும் என்று நம்பிக் கொண்டிருந்த ரசிகர்களை மெக்சிகோவுடனான போட்டியில் ஒரு கோல்கூட போடாமல் அதிர்ச்சிக்குள்ளாக்கியது பிரேசில்.
20வது உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் பிரேசிலில் நடைபெற்று வருகின்றன. தங்களது சொந்த மண்ணில் போட்டிகள் நடைபெறுவதால் எப்படியும் பிரேசில் அணி கோப்பையை வென்றுவிடும் நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.

பழி தீர்க்குமா?
பிரேசில் தனது முதலாவது போட்டியில் குரோஷியாவை வீழ்த்தியது. 2வது ஆட்டமாக மெக்சிகோவுடன் மோதியது. ஏற்கெனவே 2012 ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இறுதி ஆட்டத்தில் பிரேசிலின் தங்கப் பதக்க கனவை தகர்த்த அணி மெக்சிகோ என்பதால் ஆட்டம் மிகவும் எதிர்பார்க்கப்பட்டது.

கோலடிக்க பெரும் போராட்டம்
தொடக்கம் முதல் பரபரப்பாக விளையாடிய இரு அணிகளும் தங்களது முதல் கோலை பதிவு செய்ய பெரும் போராட்டமே நடத்தின.

மெக்சிகோ கோல் கீப்பர் அபாரம்
பிரேசில் அணியினர் கோல் அடிக்க மேற்கொண்ட ஒவ்வொரு நகர்வையுமே மெக்சிக்கோ கோல் கீப்பர் சாதுர்யமாக தடுத்துக் கொண்டே வந்தார்.

ஒரு கோல் கூட இல்லை
ஆட்டத்தின் இலக்கு நேரமான 90 நிமிடங்களை கடந்து 3 நிமிடம் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. ஆனாலும் இரு அணிகளும் ஒரு கோல் கூட போடவில்லை.

ரசிகர்கள் கடும் அதிர்ச்சி
இதைத் தொடர்ந்து ஆட்டம் சமனில் (டிரா) முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. பிரேசில் அணி சொந்த மண்ணில் பரம எதிரியான மெக்சிகோவை எதிர்த்து ஒரு கோல் கூட போட முடியாதது அந்நாட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications