Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலகக் கோப்பை கால்பந்து: சிலியின் சிலிர்ப்பை அடக்கியது நெதர்லாந்து!

சாவ் பாவ்லோ: நடப்பு சாம்பியனான ஸ்பெயினை விரட்டியடித்த சிலியின் சிலிர்ப்பை நெதர்லாந்து அடக்கிவிட்டது. உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் சிலியை நெதர்லாந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

இரு அணிகளுக்கு இடையேயான ஆட்டம் தொடங்கிய 2வது நிமிடத்திலேயே நெதர்லாந்தின் லென்ஸுக்கு பவுல் கிடைத்தது.

அடுத்தடுத்து பவுல்

அடுத்தடுத்து பவுல்

ஆட்டத்தின் 12வது நிமிடத்தில் மீண்டும் லென்ஸ் 2வது முறையாக பவுல் ஆனார். ஆட்டத்தின் 25வது நிமிடத்தில் சிலி அணியின் சில்வா பவுல் செய்தார்.

கோலே அடிக்கலையே..

கோலே அடிக்கலையே..

முதல் பாதி ஆட்டம் முடிந்தபோது இரு அணிகளும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை. பின்னர் இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கி நடைபெற்றது.

மஞ்சள் அட்டை

மஞ்சள் அட்டை

46வது நிமிடத்தில் சிலியின் அலெக்சிஸ் பவுல் ஆனார். 64வது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் ப்ளைண்ட்டிற்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. ஆனாலும் எவருமே கோலடித்த பாடு இல்லை.

பெர் அசத்தல் கோல்

பெர் அசத்தல் கோல்

இந்நிலையில் ஆட்டத்தின் 69வது நிமிடத்தில் நெதர்லாந்து அணியில் லென்சுக்கு பதிலாக மெம்பிஸ் களமிறங்கினார். 77வது நிமிடத்தில் நெதர்லாந்தின் பெர் அசத்தலான கோல் அடித்து முன்னிலைக்கு வழி வகுத்தார்.

மெம்பிஸ் சூப்பர் கோல்

மெம்பிஸ் சூப்பர் கோல்

அதைத் தொடர்ந்து 90வது நிமிடத்தில் நெதர்லாந்தின் மெம்பிஸ் மற்றொரு அழகான கோல் அடித்து 2 கோலாக உயர்த்தினார்.

சிலி தோற்றது

சிலி தோற்றது

ஆட்டம் முடியும் வரை சிலி வீரர்கள் கோல் அடிக்கவே முடியாமல் போராடினர். இதனால் நெதர்லாந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில் சிலியை வென்றது.

Story first published: Tuesday, June 24, 2014, 8:47 [IST]
Other articles published on Jun 24, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+