கடவுள் இருக்கான் குமாரு.. மெஸ்ஸி செம ஹேப்பி!
Recommended Video

மாஸ்கோ: எங்களுக்கு கடவுள் உதவுவார் என்று தெரியும். அந்த நம்பிக்கை வீண் போகவில்லை என்று கூறியுள்ளார் அர்ஜென்டினா கேப்டன் லியோனல் மெஸ்ஸி.
காலை நம்பாமல் கடவுளை நம்பும் நிலைக்கு மெஸ்ஸி தள்ளப்பட்டிருப்பது செம காமெடிதான் என்றாலும் கடவுளுக்கும், அர்ஜென்டினா அணிக்கும் ஏகப்பட்ட பொருத்தம் இருப்பது ரசிகர்கள் அறிந்ததுதான். கையால் உலகக்கோப்பைப் போட்டியில் கோல் போட்ட மாஜி ஜாம்பவான் மாரடோனா, அது கடவுள் போட்ட கோல் என்று டைவர்ட் செய்ததை மறக்க முடியுமா என்ன.
நேற்று நடந்த போட்டியில் நைஜீரியாவுக்கு எதிராக 2 கோலடித்து அர்ஜென்டினா தப்பிப் பிழைத்து ஜெயித்தது. அதில் ஒரு கோல் மெஸ்ஸி போட்டதாகும். இதுகுறித்து பின்னர் அவர் பேசுகையில் கூறியதாவது:

நம்பிக்கை இருந்தது
நாங்கள் நிச்சயம் ஜெயிப்போம் என்ற நம்பிக்கை இருந்தது. அதன்படியே நடந்தது. கடவுள் எங்கள் பக்கம் இருந்தார். இருப்பார் என்ற நம்பிக்கை இருந்தது. அதன்படியே இருந்தார்.

கடவுள் உதவி
கடவுள் எங்களுக்கு உதவுவார் என்று தெரியும். அந்த நம்பிக்கை அணியிடம் முழுமையாக இருந்தது. அதன்படியே நடந்தது. நாங்கள் டிராவை எதிர்பார்க்கவில்லை. வெற்றி உறுதி என்ற நம்பிக்கையில்தான் இருந்தோம். என்ன திட்டமிட்டோமோ அதுவே நடந்தது என்றார் மெஸ்ஸி..

மெஸ்ஸிக்கு முதல் கோல்
இந்த உலகக் கோப்பைத் தொடரில் மெஸ்ஸிக்குக் கிடைத்த முதல் கோல் இது. வந்தது முதல் கோலடிக்காமல் இருந்த மெஸ்ஸியைப் பார்த்து ரசிகர்கள் கவலையில் இருந்தனர். நேற்று அவர்கள் உற்சாகமாகி விட்டனர்.

பிரெஞ்சு சோதனை
அடுத்து காலிறுதிக்கு முந்தைய ஆட்டத்தில் பிரான்ஸை சந்திக்கவுள்ளது அர்ஜென்டினா. நேற்று அர்ஜென்டினாவிடம் தோல்வியுற்ற நைஜீரியா தொடரை விட்டு வெளியேறி விட்டது.


Click it and Unblock the Notifications