Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கால்பந்து கலகக்காரர்கள்-லிஸ்ட் கொடுத்த அர்ஜென்டினா!

Fans
கால்பந்து போட்டியில் கலகம் விளைவிப்போர் - தெ. ஆப்பிரிக்காவிடம் லிஸ்ட் கொடுத்த அர்ஜென்டினா

உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியின்போது இவர்கள் ரகளையில் ஈடுபடுவது, கலாட்டாவில் ஈடுபடுவது போன்றவற்றில் ஈடுபடலாம் என்று கூறி 800 பேரின் பட்டியலை தென் ஆப்பிரிக்க அரசிடம், அர்ஜென்டினா கொடுத்துள்ளது.

கால்பந்துப் போட்டிகளும், வன்முறையும் பிரிக்க முடியாதவை. மிகப் பெரிய அளவில் கலவரங்களாக மாறிய கால்பந்துப் போட்டிகளும் உள்ளன. என்ன விசேஷம் என்றால், போட்டி நடக்கும் நாடுகளில் உள்ளூர் ரசிகர்களை விட வெளிநாடுகளிலிருந்து வரும் முரட்டு ரசிகர்கள்தான் இதுபோன்ற கலகங்களில் பெருமளவில் ஈடுபடுகின்றனர்.

இதற்காக, உலகக் கோப்பைப் போட்டிகளின்போது கலககக்காரர்களை சமாளிக்க பாதுகாப்புப் படையினருக்குத் தனிப் பயிற்சியே அளிக்க வேண்டியுள்ளது.

இந்த நிலையில், தென் ஆப்பிரிக்காவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு முன்னதாக, அர்ஜென்டினா அரசு 800 பேர் கொண்ட ஒரு பட்டியலை தென் ஆப்பிரிக்க அரசிடம் கொடுத்துள்ளது.

அதில், இவர்கள் அனைவரும் கால்பந்துப் போட்டிகளின்போது கலாட்டா, ரகளை செய்யக் கூடியவர்கள். இவர்கள் தென் ஆப்பிரிக்காவுக்கு வந்திருந்தால், கண்காணிக்கவும் என்று கூறியுள்ளதாம் அர்ஜென்டினா.

இந்தப் பட்டியலில் உள்ள 30 பேர் ஏற்கனவே தென் ஆப்பிரிக்காவுக்கு கடந்த வாரமே வந்து விட்டதாக அர்ஜென்டினா மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Story first published: Wednesday, December 7, 2011, 18:38 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+