For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அர்ஜென்டினா எங்களிடமிருந்து எப்படி தப்பப் போகிறதோ! 'கலாய்க்கும்' நைஜீரியா கேப்டன்

By Chakra
Kanu
டர்பன்: நாங்கள் அர்ஜென்டினாவை எப்படி சமாளிப்போம் என்று கேட்காதீர்கள். அவர்கள் எங்களிடமிருந்து எப்படி தப்புவார்கள் என்றுதான் கேட்க வேண்டும் என அர்ஜென்டினா அணியை வாரியுள்ளார் நைஜீரிய அணியின் கேப்டன் வங்க்வா கனு.

உலகக் கோப்பைப் போட்டிகளைப் பொறுத்தவரை சுண்டக்காய் அணிகள் என கருதப்பட்டவை ஜாம்பவான் அணிகளின் கண்களில் காலை விட்டு ஆட்டிய வரலாறுகள் நிறைய உண்டு.

சர்வ வல்லமை பெற்ற அணிகள் பல, குட்டி அணிகளிடம் சுருண்டு போனதுண்டு. முன்பு காமரூன் அணி 1990ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பைப் போட்டியில் காலிறுதி வரை முன்னேறி அனைவரையும் அசத்தியது. அந்த அணியின் ரோஜர் மில்லாவின் அட்டகாச ஆட்டத்தை இன்றளவும் ரசிகர்கள் மறக்கவில்லை.

அந்த போட்டித் தொடரில் சுற்று ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவையும்,2-1 என்ற கோல் கணக்கில் ருமேனியாவையும் வீழ்த்தியது காமரூன். காலிறுதிப் போட்டியில் 2-3 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்திடம் தோல்வியுற்று வெளியேறியது.

காமரூன் அன்று நிகழ்த்திய சாகசத்தை இந்த முறை நாங்கள் செய்வோம் என்று கூறுகிறார் நைஜீரிய கேப்டன் கனு.

அவர் கூறுகையில், அர்ஜென்டினாவை எப்படி நாங்கள் சமாளிக்கப் போகிறோம் என்று கேட்கிறார்கள். கேள்வியை மாற்றிக் கேளுங்கள். அவர்கள் எப்படி எங்களை சமாளிப்பார்கள் என்றுதான் கேட்க வேண்டும் என்றார் படா நம்பிக்கையோடு.

சூப்பர் ஈகிள்ஸ் என்ற செல்லப் பெயர் கொண்ட நைஜீரிய அணி முதல் முறையாக 1994ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடியது. அதில் அர்ஜென்டினா இடம் பெற்றிருந்த பிரிவில் இருந்தது. சுற்றுப் போட்டியில் பல்கேரியாவை வீழ்த்தி, அர்ஜென்டினாவிடம் வீழ்ந்து, கிரீஸை வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது. அதில் இத்தாலியிடம் போராடித் தோல்வியுற்றது.

1998 உலகக் கோப்பைப் போட்டியில், சுற்றுப் போட்டியில் ஸ்பெயினை வீழ்த்தி அசத்தியது. 2வது சுற்றுக்கு முன்னேறிய நைஜீரியா, அதில்,பல்கேரியாவை மட்டும் வீழ்த்தியது. அதேசமயம், டென்மார்க், பராகுவேயிடம் தோல்வியைத் தழுவி வெளியேறியது.

2002 உலகக் கோப்பைப் போட்டியின் சுற்று ஆட்டத்திலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முதல் போட்டியில் அர்ஜென்டினாவுடன் மோதியது. அதில் முதல் பாதி ஆட்டத்தில் கோலே விழவில்லை. இருப்பினும் 2வது பாதி ஆட்டத்தில் நைஜீரியாவின் கடும் தடுப்பைத் தாண்டி பாடிஸ்டுடா கோலடித்து அர்ஜென்டினாவை வெற்றி பெறச் செய்தார்.

2வது போட்டியில் 1-3 என்ற கணக்கில் ஸ்வீடனிடம் வீழ்ந்தது. 3 வது போட்டியில் 0-0 என்ற கணக்கில் இங்கிலாந்துடன் டிரா செய்தது.

2006வது ஆண்டு உலகக்கோப்பைப் போட்டிக்கு நைஜீரியா தகுதி பெறத் தவறியது. இந்தப் பின்னணியுடன் தற்போது தென் ஆப்பிரிக்க உலகக் கோப்பைப் போட்டிக்கு வந்துள்ளது நைஜீரியா.

தற்போதைய உலகக் கோப்பைப் போட்டியில் அர்ஜென்டினா, கிரீஸ், கொரியா குடியரசு ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ள பிரிவில் உள்ளது நைஜீரியா.

12ம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் அர்ஜென்டினாவை எதிர்த்து ஆடுகிறது. 17ம் தேதி கிரீஸையும், 22ம் தேதி கொரியாவையும் சந்திக்கவுள்ளது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:38 [IST]
Other articles published on Dec 7, 2011
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+