2வது போட்டியும் டிராவில் முடிந்தது- பிரான்ஸ், உருகுவே உஷார் ஆட்டம்

உருகுவே 2 முறை சாம்பியனாக இருந்த அணி. பிரான்ஸ் ஒரு முறை சாம்பியனாக இருந்துள்ளது. நேற்றைய ஆட்டத்தில் இரு அணிகளுமே மிகுந்த கவனத்துடன் ஆடின. பிரான்ஸ் வீரர் பிராங்க் ரிபெரியும், உருகுவேயின் டியகோ போர்லானும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
நேற்றைய ஆட்டத்தில் இரு அணிகளுமே கடைசி வரை கோலடிக்காமல் டிரா செய்தன.
நேற்றைய ஆட்டத்தின்போது உருகுவே வீரர் நிக்கோலஸ், லோடரியா இரண்டு முறை மஞ்சள் கார்டு காட்டப்பட்டு, கடைசியில் ரெட் கார்டு காட்டி வெளியேற்றப்பட்டார். இதனால் 10 வீரர்களுடன் கடைசி நேரத்தில் விளையாட நேரிட்டது உருகுவேக்கு.
ஆட்டம் முடிய சில நிமிடங்களே இருந்த நிலையில் பிரான்ஸின் சிட்னி கோவோ, ஒரு கோலடிக்க முயன்றார். ஆனால் உருகுவேயின் பெர்னாண்டோ முஸ்லேரா அதை லாவகமாக தடுத்து விட்டார்.
நேற்றைய முதல் ஆட்டமும், 2வது ஆட்டமும் டிராவில் முடிந்ததால், தென் ஆப்பிரிக்கா, மெக்சிகோ, பிரான்ஸ், உருகுவே ஆகிய நான்கு அணிகளுமே தமது குரூப்பில் சம புள்ளிகளுடன் உள்ளன.
Story first published: Wednesday, December 7, 2011, 18:38 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications