ஷகீரா 'லேட்'- தாமதமாக தெ. ஆப்பிரிக்காக கிளம்பிய ஜெர்மனி வீரர்கள்

இந்த நிலையில் ஜெர்மனி நாட்டு வீரர்கள் தென் ஆப்பிரிக்காவுக்கு வந்து சேருவதில் சற்று தாமதம் ஏற்பட்டது. பிராங்கபர்ட்டிலிருந்து ஜெர்மனி வீரர்கள் தென் ஆப்பிரிக்காவுக்குக் கிளம்பினர். ஆனால் அவர்களது விமானம் சற்று தாமதமாகவே புறப்பட்டுச் சென்றது.
தாமதத்திற்குக் காரணம் பிரபல பாப் பாடகி ஷகீரா. அவரும் இந்த விமானத்தில்தான் பயணித்தார். ஆனால் விமானத்தைப் பிடிக்க சற்று லேட்டாக வந்ததால், விமானம் கிளம்ப தாமதமாகி விட்டது.
மாட்ரிட்டிலிருந்து பிராங்க்பர்ட்டுக்கு ஷகீரா வந்த விமானம் லேட்டாக வந்ததால், இந்த தாமதமாம்.
கொலம்பியாவைச் சேர்ந்த ஷகீரா உலகக் கோப்பை போட்டியின் தொடக்க நிகழ்ச்சியில் பாடவுள்ளார்த வாகா வாகா (ஆப்பிரிக்காவுக்கான நேரம்) என்ற அவரது பிரபலமான பாடலை தொடக்க விழாவின்போது பாடுகிறார் ஷகீரா. இந்தப் பாடல், தென் ஆப்பிரிக்க உலகக் கோப்பைப் போட்டியின் கீதமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, கடந்த சில நாட்களில் மட்டும் பிரான்ஸ், உருகுவே, மெக்சிகோ, தென் கொரியா ஆகிய அணிகளைச் சேர்ந்தவர்கள் தென் ஆப்பிரிக்கா வந்து சேர்ந்துள்ளனர்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:38 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications