இன்றைய உலகக்கோப்பைப் போட்டி- தென் கொரியா, கிரீஸ் மோதல்

நவீன கால கால்பந்து வரலாற்றில், தென் கொரியாவும், கிரீஸும் பல முக்கிய சாதனைகளைப் படைத்துள்ள அணிகளாகும். தென் ஆப்பிரிக்காவும் குறிப்பிடத்தக்க சில நினைவுகளுடன் நாடு திரும்ப அவர்கள் ஆர்வத்துடன் ஆட வந்துள்ளனர்.
அர்ஜென்டினா, நைஜீரியா என வலுவான அணிகளை சந்திக்க வேண்டிய நிலையில் உள்ள இரு அணிகளும், இன்றைய போட்டியில் முத்திரை பதிக்க மும்முரமாக உள்ளனர்.
2004 ஈரோ கோப்பைப் போட்டியில் போர்ச்சுகல் அணியை வீழ்த்தி அதிர்ச்சி வைத்தியம் அளித்தது கிரீஸ். அதேபோல, 2002 உலகக் கோப்பைப் போட்டியில், போர்ச்சுகல், இத்தாலி, ஸ்பெயின் ஆகிய அணிகளை வீழ்த்தி கால்பந்து ரசிகர்களை அதிர வைத்து அரை இறுதி வரை முன்னேறிய அணி தென் கொரியா.
எனவே இன்றைய போட்டியில் இரு அணிகளின் ஆட்டத்திலும் அணல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.
Story first published: Wednesday, December 7, 2011, 18:38 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications