நைஜீரிய வீரர் மிக்கல் காயம் - உலகக் கோப்பையில் விளையாட மாட்டார்

மிக்கலுக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டிருப்பதாகவும், இதனால் அவரால் விளையாட முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும் நைஜீரிய அணி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நைஜீரிய அணியின் அதிகாரி இம்மானுவல் அட்டா கூறுகையில், மிக்கலுக்கு முழங்காலில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டிருந்தது. அதிலிருந்து அவர் இன்னும் மீளவில்லை. எனவே அவரால் உலகக் கோப்பைப் போட்டியில் விளையாட முடியாது என்றார்.
நைஜீரியா அணி சவூதி அரேபியா, கொலம்பியா ஆகியவற்றுடன் மோதிய வார்ம் அப் போட்டிகளில் மிக்கல்இடம் பெறவில்லை. இந்த நிலையில் தற்போது அவர் உலகக்கோப்பைப் போட்டியில் ஆட மாட்டார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மிகச் சிறந்த மிட்பீல்டரான மிக்கல் விளையாடாதது நைஜீரிய அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:38 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications