Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2018இல் பூமியின் பாதி மக்கள் தொகை பார்த்து ரசித்த நிகழ்வு எது? சரியா சொல்லுங்க பார்ப்போம்

லண்டன் : ஃபிபா 2018 உலகக்கோப்பை கால்பந்து தொடர் தான் 2018 ஆம் ஆண்டின் மிகப் பெரிய விளையாட்டுத் திருவிழா என சொல்லலாம்.

அந்த அளவிற்கு மக்களை ஈர்த்த நிகழ்வாக அமைந்தது இந்த ஆண்டின் கால்பந்து உலகக்கோப்பை தொடர்.

ஃபிபா வெளியிட்டுள்ள தகவலில் சுமார் 350 கோடி மக்கள் இந்த முறை கால்பந்து உலகக்கோப்பை தொடரை கண்டு களித்துள்ளனர் என தெரிவித்துள்ளது.

வரலாற்றில் அதிகம் இது தான்

வரலாற்றில் அதிகம் இது தான்

ஃபிபா-வின் அறிக்கைப் படி கடந்த ஜூன் 14 முதல் ஜூலை 15 வரை நடைபெற்ற தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடகங்கள் மூலம் சுமார் 357 கோடி மக்கள் பார்த்துள்ளனர். ஃபிபா உலகக்கோப்பை வரலாற்றில் இதுவே அதிகம் ஆகும்.

மொத்த பார்வையாளர்கள் எண்ணிக்கை

மொத்த பார்வையாளர்கள் எண்ணிக்கை

வீட்டில் இருக்கும் தொலைக்காட்சி மூலம் 326.2 கோடி பார்வையாளர்களும், டிஜிட்டல் ஊடகங்கள் மற்றும் பொது வெளியில் உள்ள தொலைக்காட்சி மற்றும் திரைகள் மூலம் சுமார் 30.97 கோடி மக்களும் குறைந்த பட்சம் ஒரு நிமிடமாவது ஃபிபா 2018 உலகக்கோப்பையை கண்டு களித்துள்ளனர்.

இறுதிப் போட்டி பார்வையாளர்கள்

இறுதிப் போட்டி பார்வையாளர்கள்

ஜூலை 15 அன்று நடந்த பிரான்ஸ் - குரோஷியா இறுதிப் போட்டியை வீட்டில் இருக்கும் தொலைக்காட்சி மூலம் 112 கோடி பார்வையாளர்களும், டிஜிட்டல் ஊடகங்கள் மற்றும் பொது வெளியில் உள்ள தொலைக்காட்சி மற்றும் திரைகள் மூலம் சுமார் 8.84 கோடி மக்களும் குறைந்த பட்சம் ஒரு நிமிடமாவது கண்டு களித்துள்ளனர்.

30 நிமிடத்திற்கும் மேல் பார்த்தவர்கள்

30 நிமிடத்திற்கும் மேல் பார்த்தவர்கள்

குறைந்த பட்சம் 30 நிமிடத்திற்கும் மேல் பார்த்த பார்வையாளர்கள் எண்ணிக்கை 249 கோடி ஆகும். கடந்த 2014 உலகக்கோப்பையில் இது 195 கோடியாக இருந்தது. இதன் மூலம் பார்வையாளர்களின் சராசரி நேரம் முன்பை விட பல மடங்கு அதிகரித்துள்ளது.

உலகின் பாதி மக்கள் தொகை

உலகின் பாதி மக்கள் தொகை

இந்த தரவுகளின் மூலம் கிட்டத்தட்ட உலகின் பாதி மக்கள் தொகை கால்பந்து பார்த்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இந்தியாவில் கூட 2018இல் இணையத்தில் அதிக மக்கள் தேடிய வார்த்தை ஃபிபா கால்பந்து 2018 தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, December 22, 2018, 18:38 [IST]
Other articles published on Dec 22, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+