For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

2018இல் உலககோப்பையை தாண்டி இந்தியர்களை ஈர்த்த முக்கிய கால்பந்து செய்திகள் எது தெரியுமா?

லண்டன் : 2018இல் கூகுளில் கிரிக்கெட்டை விட இந்தியாவில் அதிக மக்கள் தேடியது கால்பந்து தான். அதற்கு காரணம் இந்த ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்ற கால்பந்து உலகக்கோப்பை.

இது மட்டுமின்றி இந்தியாவில் உள்ள கால்பந்து ரசிகர்களும் கூர்ந்து கவனித்த ஐந்து முக்கிய கால்பந்து செய்திகள் இவை தான்.

ரியல் மாட்ரிட் வெற்றி

ரியல் மாட்ரிட் வெற்றி

UEFA சாம்பியன்ஸ் லீக் தொடரில் தொடர்ந்து மூன்றாவது முறையாக கோப்பை வென்று புதிய சாதனை படைத்தது ரியல் மாட்ரிட் அணி. மே 26 அன்று நடைபெற்ற இறுதியில் ரியல் மாட்ரிட் அணி, லிவர்பூல் அணியை 4-1 என்ற கோல்களில் வீழ்த்தியது. இதுவரை எந்த கிளப்பும் இதற்கு முன் மூன்று முறை தொடர்ந்து சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்றதில்லை.

2026 ஃபிபா கால்பந்து தொடர்

2026 ஃபிபா கால்பந்து தொடர்

2026 ஃபிபா கால்பந்து உலகக்கோப்பை தொடரை அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா இணைந்து நடத்த ஒப்புதல் அளித்தது ஃபிபா. மெக்சிகோ மூன்றாவது முறையாக கால்பந்து உலகக்கோப்பை தொடரை நடத்தும் வாய்ப்பை பெற்றுள்ளது. வேறு எந்த நாடும் மூன்று முறை கால்பந்து உலகக்கோப்பை தொடரை நடத்தும் வாய்ப்பை பெற்றதில்லை.

கால்பந்து உலகக்கோப்பை

கால்பந்து உலகக்கோப்பை

ரஷ்யாவில் நடைபெற்ற ஃபிபா கால்பந்து உலகக்கோப்பை தொடரில் பிரான்ஸ் அணி இறுதிப் போட்டியில் குரோஷியா அணியை 4-2 என வீழ்த்தி உலகக்கோப்பையை வென்றது. பிரான்ஸ் அணி இரண்டாவது முறையாக கால்பந்து உலகக்கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.

லூகா மோட்ரிக் வளர்ச்சி

லூகா மோட்ரிக் வளர்ச்சி

கடந்த பத்து ஆண்டுகளாக இருந்த மெஸ்ஸி - ரொனால்டோ ஆதிக்கம் குறைந்து கால்பந்து உலகில் அடுத்த கட்ட நட்சத்திர வீரர்கள் உருவாக தொடங்கி இருக்கிறார்கள். அதை உறுதிப்படுத்தும் வகையில் 2018இல் லூகா மோட்ரிக் உயரிய விருதுகளான சிறந்த கால்பந்து வீரர் விருது மற்றும் பலோன் டி'ஆர் விருது இரண்டையும் கைப்பற்றினார்.

Story first published: Saturday, December 29, 2018, 18:46 [IST]
Other articles published on Dec 29, 2018
English summary
Year ender 2018 - Important International Football events in 2018, such as FIFA World cup 2018, UEFA Champions League, Bid for 2026 FIFA world cup etc.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X