Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஹாக்கியில் "ஓகி" ஆகுமா இந்திய அணி?

புவனேஸ்வர்: தமிழகத்தில் தென் பகுதிகளில் தனது வேகத்தால், மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வரும் ஓகி புயல் போல, உலக ஹாக்கி லீக் பைனல்ஸ் தொடரில் இந்திய அணி முழு வேகத்தை காட்டுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஹாக்கியில் சர்வதேச தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள அணிகள் பங்கேற்கும் உலக ஹாக்கி லீக் பைனல்ஸ் தொடர் போட்டிகள் ஒடிசாவில் இன்று துவங்குகிறது.

Acid test for Indian hockey


இத்தொடரில், ஏ பிரிவில் அர்ஜென்டினா, பெல்ஜியம், நெதர்லாந்து, ஸ்பெயின் அணிகளும், பி பிரிவில் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, ஜெர்மனி அணிகளும் இடம் பெற்றுள்ளன. லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோதும்.

இந்தத் தொடரில் இன்று நடக்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவுடன், போட்டியை நடத்தும் இந்தியா விளையாட உள்ளது.

அணியின் பயிற்சியாளராக ஜோயர்டு மரிஜ்னே பொறுப்பேற்ற பிறகு, அணியில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. அணியின் தற்போதைய சராசரி வயது 23.5 ஆகும். அனுபவமும், இளமையும் கலந்த கலவையாக அணி அமைந்துள்ளது.

சமீபத்தில் ஆசியக் கோப்பையை வென்றதன் மூலம் இந்திய அணி நம்பிக்கையுடன் உள்ளது. சொந்த மண்ணில் விளையாடுவது கூடுதல் பலம். உலகத் தரவரிசையில் இந்திய அணி 6வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

உலக ஹாக்கி லீக் பைனல்ஸ் போட்டிகளில், 2014-15ல், வெண்கலம் வென்றதே இந்திய அணியின் அதிகபட்ச முன்னேற்றமாகும். புது ரத்தம் பாய்ச்சப்பட்டுள்ள இந்திய அணி, இந்தத் தொடரில் சாதிக்குமா என்று பார்ப்போம்.
Story first published: Friday, December 1, 2017, 15:27 [IST]
Other articles published on Dec 1, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+