For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முதல்ல அந்த பிளட்சரை விரட்டி விடுங்க சார்... கவாஸ்கர் ஆவேசம்

டெல்லி: இந்திய அணியின் பயிற்சியாளராக இருக்கும் டங்கன் பிளட்சரால் நமது அணிக்கு ஒரு பலனும் இல்லை. தொடர்ந்து தோல்விகளைத்தான் சந்தித்து வருகிறோம். பிளட்சர் உடனடியாக நீக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கோபத்துடன் கூறியுள்ளார்.

தொடர்ந்து வெளிநாடுகளில் போய் தோற்று விட்டு வருவதை இந்திய அணி கிட்டத்தட்ட கலாச்சாரமாகவே மாற்றி விட்டது. வென்றால்தான் ஆச்சரியம் என்ற ரேஞ்சுக்குப் போய் விட்டார்கள்.

ஆசிய கோப்பைப் போட்டியைக் கூட நம்மால் வெல்ல முடியாமல் போய் விட்டது. இதனால் ரசிகர்கள் கடும் எரிச்சலடைந்துள்ளனர். அதேசமயம், முதலில் இந்திய அணியின் பயிற்சியாளர் பிளட்சரை மாற்ற வேண்டும் என்று முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது

ரொம்ப மோசம்

ரொம்ப மோசம்

மிகவும் மோசமாக போய்க் கொண்டிருக்கிறது நிலை. இதை எப்படி நிறுத்தப் போகிறோம் என்று தெரியவில்லை.

பிளட்சரை தூக்குங்கள்

பிளட்சரை தூக்குங்கள்

முதலில் பயிற்சியாளரை நீக்க வேண்டும். அவருக்குப் பதில், இளமையானவராக, துடிப்பானவராக ஒரு பயிற்சியாளரை உடனே போட வேண்டும்.

அணியுடன் இணைந்து செயல்படும் பயிற்சியாளர்

அணியுடன் இணைந்து செயல்படும் பயிற்சியாளர்

புதிய பயிற்சியாளர் அணியுடன் இணைந்து செயல்படுபவராக, அனைத்து வீரர்களையும் தட்டி்க கொடுத்து வழி நடத்துபவராக இருக்க வேண்டும்.

கிர்ஸ்டன் மாதிரி வருமா..

கிர்ஸ்டன் மாதிரி வருமா..

கேரி கிர்ஸ்டன் காலத்தில் இந்திய அணி மிகச் சிறப்பாக இருந்தது. ஆனால் இன்று மிக பரிபாதமான நிலைக்கு வந்து விட்டது. கிர்ஸ்டனை அத்தனை வீரர்களும் மதித்தார்கள். அவர் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் நிபுணத்துவம் பெற்றவராக இருந்ததே அதற்குக் காரணம்.

பயிற்சி முக்கியம்

பயிற்சி முக்கியம்

அணியினருக்கு பயிற்சி எந்த அளவுக்கு முக்கியம் என்பதை உணர்ந்தவர் கிர்ஸ்டன். அவரது தலைமையின் கீழ் அணியினருக்கு நல்ல, போதுமான பயிற்சி கிடைத்தது. ஆனால் இப்போது அப்படி இல்லை.

அவர் போனாரு.. நாமும் போயிட்டோம்

அவர் போனாரு.. நாமும் போயிட்டோம்

கிர்ஸ்டான் போனார். அதற்குப் பிறகு நாம் சரியத் தொடங்கி விட்டோம். இது அதிர்ச்சியாக இருக்கிறது என்றார் கவாஸ்கர்.

கவாஸ்கர் சில நேரம் உருப்படியாகவும் பேசுவார்... உண்மையில் பிளட்சர் என்னதான் செய்கிறார் என்ற கேள்வி சாதாரண ரசிகர்களிடமே இருக்கிறது. அதைத்தான் கவாஸ்கர் தனது கட்டுரையில் இப்படி வெ்ளிப்படுத்தியுள்ளார்.

Story first published: Monday, March 10, 2014, 17:36 [IST]
Other articles published on Mar 10, 2014
English summary
Former India captain Sunil Gavaskar says it is time that Indian cricket looks to replace Duncan Fletcher and bring in someone who is young, energetic and whose ideas can galvanise players ahead of the World Cup in Australia and New Zealand next year. In his column for a national daily, Gavaskar trains his guns at 65-year-old Fletcher and writes that under the former Zimbabwe cricketer, the Indian players have looked extremely ordinary. "It (Indian cricket) seems to be in a freefall that looks tough to arrest," he writes. "What Indian cricket needs right now is a younger coach who will want to be out working with the team and not looking to put his feet up at the slightest chance."
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X