For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நம்ப முடியவில்லை..!! கத்துக்குட்டி அணியுடன் இந்தியா தோல்வி..!! ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கியில் அதிர்ச்சி

டாகா: ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி தொடர் வங்கதேச தலைநகர் டாகாவில் நடைபெற்று வருகிறது

ரவுண்ட் ராபின் முறையில் நடைபெற்ற லீக் சுற்றில் கொரியாவுடன் டிரா செய்த இந்திய அணி, வங்கதேசம்,ஜப்பான், பாகிஸ்தானை வீழ்த்தியது.

இதன் மூலம் அரையிறுதியில் ஜப்பானை இந்தியா எதிர்கொண்டது.லீக் சுற்றில் 6க்கு0 என்ற கோல் கணக்கில் இந்தியா வென்றது.

இதனால், ஓவர் உத்வேகத்துடன் அரையிறுதியில் ஜப்பானை எதிர்கொண்டது இந்திய அணி. ஆனால் ஜப்பான் அணி வீரர்கள் இந்தியாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தனர். ஆட்டத்தின் முதல் 15 நிமிடத்திலேயே ஜப்பான் அணி வீரர்கள் 2 கோல் அடித்து முன்னிலை பெற்றனர்

Asia champions Hockey semi final Japan beat India

ஆட்டத்தின் 2வது பகுதியில் இந்திய வீரர் ஹர்திக் ஒரு கோல் அடித்தார். அதன் பின் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை இந்தியா வீணடிக்க, ஜப்பான் தங்களுக்கு கிடைத்த பெனால்டி ஸ்டேராக் வாய்ப்பை கோலாக மாற்றினர். இதனையடுத்து ஸ்கோர் 3க்கு1 என்ற கணக்கில் ஆனது

இதனைத் தொடர்ந்து ஜப்பான் வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி அடுத்தடுத்து 2 கோல் அடிக்க, இறுதியில் இந்திய அணி 2 கோல் அடித்தது. இதனால் ஜப்பான் அணி 5க்கு3 என்ற கோல் கணக்கில் வென்றது. தரவரிசையில் 17வது இடத்தில்இருந்த ஜப்பான் அணியுடன் இந்தியா அதிர்ச்சி தோல்வியை தழுவியது. தற்போது இந்திய அணி 3வது இடத்திற்கு பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

Story first published: Tuesday, December 21, 2021, 20:36 [IST]
Other articles published on Dec 21, 2021
English summary
Asia champions Hockey semi final Japan beat India. ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி அரையிறுதியில் ஜப்பான் அணி 5க்கு3 என்ற கோல் கணக்கில் வென்றது.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+