Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆசிய கோப்பை ஹாக்கி - 2 அணிக்குமே 10 பேர் தான்.. கடைசி நொடி வரை த்ரில்.. வெண்கலம் வென்ற இந்தியா

ஜகார்டா: ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி வெண்கலப் பதக்கத்தை தட்டி சென்றது. ஆசிய கோப்பை வரலாற்றில் 40 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக,

Recommended Video

Asia Cup Hockey 2022: India Bronze Medal வென்றது! | #Sports | OneIndia Tamil

இந்தியாவும், பாகிஸ்தானும் இல்லாமல் இறுதிப் போட்டி நடைபெறுகிறது. இந்தோனேசிய தலைநகர் ஜகார்டாவில் இந்த தொடர் நடைபெறுகிறது.

இதில் இந்திய அணி எதிர்காலத்தை கருத்தில் கொண்ட முற்றிலும் இளைய அணியை வைத்து களமிறங்கியது.

இந்திய அணி சூப்பர் 4 பிரிவில் தென் கொரியாவை எதிர்கொண்டது. இதில் வெற்றி பெற்று இருந்தால் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பு கிடைத்திருக்கும். ஆனால் இந்திய அணி 4க்கு4 என்ற கோல் கணக்கில் டிரா கண்டதால், நடப்பு சாம்பியனான இந்திய அணி இறதிப் போட்டிக்கு முன்னேற முடியாமல் இருந்தது.

Asia cup Hockey- India beat Japan by 1-0 and wins bronze medal

இதனையடுத்து, ஜப்பானுடன் 3வது இடத்திற்கான போட்டியில் இந்தியா விளையாடியது. தொடக்கம் முதலே ஜப்பான் வீரர்கள் கொஞ்சம் பதற்றத்துடன் விளையாடினர். இந்தியாவும் 2 ஃப்ரி ஹிட் வாய்ப்பை வீணடித்தது. அதன் பிறகு ஆட்டத்தின் 6வது நிமிடத்திலேயே ராஜ்குமார் பால் முதல் கோலை அடித்தார்.

இதன் மூலம் இந்தியாவின் 1க்கு0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. இதன் பிறகு நடைபெற்ற ஃபவுலில் ஜப்பான் அணி வீரர்கள் ஒரு வீரரை இழக்க, இந்தியாவும் கடைசி 10 நிமிடத்தில் ஒரு வீரரை இழக்க, இதனையடுத்து 10க்கு10 என்ற வீரர்களே களத்தில் நின்று போராட, இந்தியாவின் தற்காப்பு பலமாக இருந்ததால், இந்திய அணி 1க்கு0 என்ற கோல் கணக்கில் வென்று வெண்கலப் பதக்கத்தை முதல் முறையாக வென்றது.

Story first published: Wednesday, June 1, 2022, 17:24 [IST]
Other articles published on Jun 1, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+