Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஹாக்கி - பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா.. சென்னையில் நடந்த கோல் வேட்டை

சென்னை : ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பாகிஸ்தானை நான்குக்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் இந்திய அணி அபாரமாக வீழ்த்தியது. தரவரிசை பட்டியலில் நான்காவது இடத்தில் இருந்த இந்தியாவும் 16 வது இடத்தில் இருந்த பாகிஸ்தானும் மோதியது.

பாகிஸ்தான் முன்பு போல் பலம் வாய்ந்த அணியாக இல்லை. இதன் காரணமாக இந்திய அணியின் கையே ஓங்கி இருந்தது. இதன் காரணமாக போட்டிக்கு முன்பே பாகிஸ்தான் இந்த போட்டியில் வெற்றி பெறாது என்பது போல் அந்த அணியின் துணை பயிற்சியாளர் ரேகான் பட் கூறியிருந்தார்.

Asian champions trophy hockey - India thrash pakistan 4-0

அதற்கு ஏற்றார் போல் தான் ஆட்டமும் அமைந்தது. சென்னையில் மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடந்த இந்தப் போட்டிக்கு அனைத்து டிக்கெட்களும் விற்று தீர்ந்தது. பாகிஸ்தான் பலம் குன்றிய அணியாக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக நாங்கள் 200 சதவீதம் போட்டி திறனை வெளிப்படுத்துவோம் என மந்திப் சிங் கூறியது இந்த போட்டியின் முக்கியத்துவத்தை உணர்த்தியது.

ஆட்டம் தொடங்கியதுமே பாகிஸ்தான் வீரர்கள் இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்க பார்த்தனர். ஆனால் இந்திய அணியினர் தங்களுடைய அனுபவ ஆட்டத்தின் மூலம் அதனை சுலபமாக எதிர்கொண்டு கோல்களை அடித்தனர். குறிப்பாக நட்சத்திர வீரர்கள் ஹர்மன் பிரித்து ஆட்டத்தின் 15-வது நிமிடத்திலும் 23-வது நிமிடத்திலும் கோல் அடித்து அசத்தினார்.

இதன் மூலம் இந்திய அணி இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது. இதைத் தொடர்ந்து போட்டியின் 35 வது நிமிடத்தில் ஜூகுராஜ் மூன்றாவது கோலையும் அக்சதீப் 54ஆவது நிமிடத்தில் நான்காவது கோலையும் அடித்தனர். ஒரு கோலையாவது போட்டு விடலாம் என நினைத்த பாகிஸ்தானுக்கு கடைசி ஏமாற்றமே மிஞ்சியது.

இதன் மூலம் நான்குக்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த தோல்வியின் மூலம் பாகிஸ்தான் அணி தொடரை விட்டு வெளியேறியது. கிரிக்கெட்டில் தான் இந்தியாவும் பாகிஸ்தானும் பார்க்கும் கொடுப்பினை தமிழக ரசிகர்களுக்கு இல்லை. ஆனால் தற்போது ஹாக்கியில் இரு அணிகளும் மோதியதை தமிழக ரசிகை பார்த்துக் கொண்டாடினர். இந்த போட்டியை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் விளையாட்டு துறை, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Story first published: Wednesday, August 9, 2023, 22:58 [IST]
Other articles published on Aug 9, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+