Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி.. சென்னையில் இன்று தொடக்கம்.. இந்தியா - சீனா பலப்பரீட்சை!

சென்னை: 7வது ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி தொடர் சென்னையில் இன்று தொடங்குகிறது. 16 ஆண்டுகளுக்கு பின் சென்னையில் ஹாக்கி தொடர் நடப்பதால், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

7வது ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி தொடர் சென்னையில் இன்று தொடங்குகிறது. 2011ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் ஹாக்கி தொடர், முதல்முறையாக இந்தியாவில் நடக்கிறது. இந்தத் தொடரில் நடப்பு சாம்பியனான தென் கொரியா, இந்தியா, பாகிஸ்தான், சீனா, மலேசியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்க உள்ளன.

இன்று நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான தென் கொரியா அணியை எதிர்த்து ஜப்பான் அணி விளையாடவுள்ளது. அதன்பின் மாலை 6.15 மணிக்கு தொடங்கவுள்ள போட்டியில் மலேசியா அணியை எதிர்த்து பாகிஸ்தான் அணி விளையாடுகிறது. அதன்பின் இரவு 8.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் இந்தியாவை எதிர்த்து சீனா விளையாடவுள்ளது.

Asian Champions Trophy Hockey to start in Chennai Today

இன்று தொடங்கும் ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி தொடர் ஏப்ரல் 12ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. இந்த தொடரில் ஒவ்வொரு அணியும் லீக் சுற்றில் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். அதன் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணியை பொறுத்தவரை கடந்த ஒலிம்பிக் தொடரில் வெண்கலம் வென்றிருந்தாலும், இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பைத் தொடரில் 9வது இடத்தை பிடித்து பின்னடைவை சந்தித்தது. அதேபோல் அண்மையில் ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி கடந்த வாரம் ஸ்பெயினில் நடந்த 4 நாடுகள் ஹாக்கி தொடரில் பலம் வாய்ந்த நெதர்லாந்து அணியை வீழ்த்தி வெண்கலம் வென்றது.

உலகக்கோப்பைத் தொடருக்கு பின் இந்திய அணி விளையாடியுள்ள 16 போட்டிகளில் 9 வெற்றி, 5 தோல்வி, 2 டிராவை சந்தித்துள்ளது. இதனால் 2011, 2016 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளுக்கு பின் இந்திய அணி சாம்பியன்ஷிப்பை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆசிய போட்டிகளுக்கு முன் இந்திய அணி முக்கியமான தொடரில் விளையாடவுள்ளது, இந்திய வீரர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது.

ஏனென்றால் அடுத்த மாதம் நடக்கும் ஆசிய போட்டிகளில் வெற்றிபெறுவதன் மூலம், அடுத்த ஆண்டு நடக்கும் பாரீஸ் ஒலிம்பிக் தொடருக்கு நேரடி வாய்ப்பு கிடைக்கும். இதனால் இந்த தொடர் இந்திய அணிக்கு தங்களது பலத்தை சோதிக்கும் தொடராகவும் அமைந்திருக்கிறது.

இந்திய அணி விவரம்: ஸ்ரீஜேஷ் (கோல்கீப்பர்), கிருஷ்ணன் பஹதூர் பதக் (கோல்கீப்பர்), ஜ்ஜர்மன்பிரீத் சிங், சுமித், ஜூடக்ராஜ் சிங், ஹர்மன்பிரீத் சிங் (கேப்டன்), அமித் ரோஹிதாஸ், வருண் குமார், ஆகாஷ்தீப் சிங், மன்தீப் சிங், குர்ஜந்த் சிங், சுக்ஜீத் சிங், கார்த்தி, ஹர்திக் சிங், விவேக் சாகர் பிரசாத், மன்பிரீத் சிங், நீலகண்ட சர்மா, ஷம்ஷேர் சிங்

Story first published: Thursday, August 3, 2023, 9:05 [IST]
Other articles published on Aug 3, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+