Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆசிய போட்டி 2026: இந்திய ஆடவர் ஹாக்கி அணி தங்கம் வென்று சாதனை.. 2028 ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

ஐச்சி நகோயா: ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஆடவர் ஹாக்கி இறுதிப் போட்டியில், மலேசிய அணியை 5-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி தங்கப் பதக்கத்தை வென்று அசத்தியுள்ளது. இந்த வரலாற்று வெற்றியின் மூலம், 2028-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சலஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய அணி நேரடியாகத் தகுதி பெற்றுள்ளது.

போட்டி தொடங்கிய முதல் பகுதியிலேயே இந்திய அணி ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. ஆட்டத்தின் 11-வது நிமிடத்தில், கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் பெனால்டி கார்னர் வாய்ப்பைப் பயன்படுத்தி முதல் கோலை அடித்தார். எனினும், 14-வது நிமிடத்தில் மலேசிய அணியின் ஷெல்லோ சில்வேரியஸ் ஒரு கோல் அடித்து ஆட்டத்தை 1-1 என சமநிலைக்குக் கொண்டு வந்தார்.

India Hockey

இரண்டாவது பகுதியில், ஆட்டத்தின் 8-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை ஜுக்ராஜ் சிங் கோலாக மாற்றினார். இதனால் ஆட்டத்தின் முதல் பாதி முடிவில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. தொடர்ந்து மூன்றாவது பகுதியின் 12-வது நிமிடத்தில், ஹர்திக் சிங் பெனால்டி ஸ்ட்ரோக் மூலம் கோல் அடித்து இந்தியாவின் முன்னிலையை 3-1 ஆக உயர்த்தினார்.

கடைசி நிமிடத்தில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா.. ஆசிய விளையாட்டு ஹாக்கி பைனலுக்கு முன்னேற்றம்

கடைசி நிமிடத்தில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா.. ஆசிய விளையாட்டு ஹாக்கி பைனலுக்கு முன்னேற்றம்

ஆட்டத்தின் கடைசி பகுதியில், போட்டி முடிய இன்னும் 6 நிமிடங்களே இருந்த நிலையில், ஷிலாநந்த் லக்ரா ஒரு அபாரமான ஃபீல்டு கோல் அடித்து அசத்தினார். இதனால் இந்தியா 4-1 என வலுவான நிலையை எட்டியது. ஆட்டத்தின் இறுதி நிமிடங்களில் மலேசிய அணி தீவிரமாக முயன்றபோதும், ஹர்மன்பிரீத் சிங் மீண்டும் ஒரு பெனால்டி கார்னர் கோல் அடித்து இந்தியாவின் வெற்றியை 5-1 என உறுதி செய்தார். இப்போட்டியில் மலேசிய அணியால் இந்தியாவின் பலமான டிஃபென்ஸ் மற்றும் ஆட்டத்தை முறியடிக்க இயலவில்லை.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் வரலாற்றில், இந்திய ஆடவர் ஹாக்கி அணி தனது தங்கப் பதக்கத்தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக தக்கவைத்துக் கொள்வது இதுவே முதல் முறையாகும். மேலும், நேற்று நடைபெற்ற மகளிர் ஹாக்கி இறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி 1-0 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தி தங்கம் வென்றிருந்தது. இதன் மூலம், ஒரே ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் ஹாக்கி அணிகள் இரண்டுமே தங்கம் வெல்வது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.

சீனாவை வீழ்த்தி இந்திய மகளிர் ஹாக்கி அணி தங்கம் வென்றது.. 2028 ஒலிம்பிக்கிற்கும் நேரடி தகுதி

Also Read

சீனாவை வீழ்த்தி இந்திய மகளிர் ஹாக்கி அணி தங்கம் வென்றது.. 2028 ஒலிம்பிக்கிற்கும் நேரடி தகுதி

இந்தியாவைப் பொறுத்தவரை இந்த ஆடவர் ஹாக்கி இறுதிப் போட்டியே இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியின் இறுதி பிரிவாகும். இந்த தங்கப் பதக்கத்தோடு சேர்த்து, இந்தியா மொத்தம் 21 தங்கம் உட்பட 85 பதக்கங்களை வென்று தனது ஆசிய விளையாட்டுப் போட்டிப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

Story first published: Saturday, October 3, 2026, 17:39 [IST]
Other articles published on Oct 3, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+