Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Asian Games: மொத்தமாக 10 கோல்.. ஸ்குவாஷ் மட்டுமல்ல.. ஹாக்கியிலும் பாகிஸ்தானை சம்பவம் செய்த இந்தியா!

ஹாங்சோ: ஆசிய போட்டிகளில் ஹாக்கி பிரிவில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 10-2 என்ற கோல் கணக்கில் இந்தியா அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.

சீனாவின் ஹாங்சோ நகரில் ஆசிய விளையாட்டு போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற 7வது நாள் போட்டிகளில் இந்தியா சார்பாக துப்பாக்கிச்சுடுதல் கலப்பு இரட்டையர் 10 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்தியா வெண்கலம் வென்றது. அதேபோல் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் போபண்ணா - ருதுஜா இணை தங்கம் வென்றது.

Asian Games2023: India defeats Pakistan by 10-2 Goals in Hockey Pool A Match

இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஸ்குவாஷ் இறுதிச்சுற்றில் இந்திய அணியின் அபய் சிங்கின் அபாரமான ஆட்டத்தால் தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது. தோல்வியின் பிடியில் இருந்த இந்திய அணியை மீட்டு வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார். இதனால் இந்திய ரசிகர்கள் பலரும் அபய் சிங்கிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஹாக்கி பிரிவில் இன்றையப் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து இந்திய அணி களமிறங்கியது. தொடக்கம் முதலே இந்திய அணியின் ஆதிக்கம் தொடர்ந்த நிலையில், 8வது நிமிடத்திலேயே முதல் கோலை அடித்தது. இதன்பின் அடுத்த 3வது நிமிடத்தில் இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் 2வது கோலை அடித்தார். இதன் மூலம் இந்தியா 10-2 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

பின்னர் தொடங்கிய இரண்டாவது குவார்டரில் இந்திய அணி 3வது கோலை அடிக்க, முதல் பாதி ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் 4வது கோலையும் இந்திய அணி அடித்தது. இந்திய அணி வீரர்களை கட்டுப்படுத்த முடியாமல் பாகிஸ்தான் டிஃபெண்டர்கள் திணறினர். பின்னர் நடைபெற்ற இரண்டாம் பாதியின் முதல் 4 நிமிடத்திலேயே இந்தியா 2 கோல்களை அடித்தது. இதிலும் இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் 4 கோல்களை அடித்தார்.

இதன்பின் 38வது நிமிடத்தில் பாகிஸ்தான் அணி முதல் கோலை அடிக்கம் ஆட்டம் 6-1 என்ற நிலையில் இருந்தது. இந்திய அணியின் வெற்றி உறுதியான நிலையில், வீரர்கள் அனைவரும் அட்டாக் மேல் அட்டாக் செய்தனர். இதன் பலனாக ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 10-2 என்ற கோல் கணக்கில் அபார வெற்றியை பெற்றது. இந்த வெற்றியின் மூலம் குரூப் ஏ பிரிவில் 4 வெற்றிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

Story first published: Saturday, September 30, 2023, 21:41 [IST]
Other articles published on Sep 30, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+