Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலக கோப்பை ஹாக்கி - 8 க்கு 0 என்ற கோல் கணக்கில் பிரான்சை பந்தாடிய ஆஸி. வேற லெவல் ஆட்டம்

ரூர்கேலா : 15வது ஆடவருக்கான உலக கோப்பை ஹாக்கி தொடர் இன்று முதல் இந்தியாவின் ஓடிசா மாநிலத்தில் தொடங்கியது. இதில் இந்திய அணி 48 ஆண்டுகளுக்கு பிறகு சாம்பியன் பட்டத்தை வெல்லுமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

16 அணிகள் நான்கு பிரிவுகளாக மோதுகிறது. ஓடிசாவில் புபனேஸ்வர் நகரிலும், ரூர்கேலாவில் புதியமாக அமைக்கப்பட்டுள்ள ஹாக்கி மைதானத்திலும் போட்டிகள் நடைபெறுகிறது.

தொடர்ந்து 2வது முறையாக உலககோப்பை ஹாக்கி தொடரை இந்தியா நடத்துகிறது. இதில் தொடரின் முதல் நாளே சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலியா தனது ஆதிக்கத்தை காட்டியது.

கோல் மழை

கோல் மழை

தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவும், 12வது இடத்தில் உள்ள பிரான்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தியது. இதில் போட்டி தொடங்கியதில் இருந்தே ஆஸ்திரேலிய வீரர்கள், தாங்கள் கங்காரூக்கள் இல்லை, புலிகள் என்பதை நிரூபித்தனர். ஏதோ வீடியோ கேமில் வருவது போல் ஆஸ்திரேலிய வீரர்கள் கோல் மழை பொழிந்தனர்.

அடுத்தடுத்து கோல்

அடுத்தடுத்து கோல்

ஆட்டத்தின் 8வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் கிரைக் டாம் முதல் கோல் அடித்தார். இதன் பிறகு கிடைத்த 2 பெனால்டி கார்னர் வாய்ப்பை ஆஸ்திரேலியா வீணடித்தது. ஆஸ்திரேலியா செய்த தவறு என்றால் அது ஒன்று மட்டும் தான். இதனைத் தொடர்ந்து ஆட்டத்தின் 2வது பகுதியில் 26வது நிமிடத்தில் மட்டும் ஆஸ்திரேலிய வீரர்கள் 2 கோல்களை அடித்தனர். அதன் பிறகு கண் இமைப்பதற்குள் 28வது நிமிடத்தில் 4வது கோலை ஆஸ்திரேலிய வீரர்கள் அடித்தனர்.

 ஹாட்ரிக் கோல்

ஹாட்ரிக் கோல்

இதன் பிறகு ஆட்டத்தின் 3வது பகுதி தொடங்கியது. போட்டியின் 31வது நிமிடத்தில் கிரைக் டாம் 5வது கோலையும்,38வது நிடத்தில் ஜெர்மி 6வது கோலையும் அடித்தனர். இதனைத் தொடர்ந்து 44வது நிமிடத்தில் மீண்டும் கிரைக் டாம் ஆஸ்திரேலியாவின் 7வது கோலை அடித்தார். இதன் மூலம் ஹாட்ரிக் கோல்களை அவர் பதிவு செய்தார். இதே போன்று ஆட்டத்தின் 4வது பகுதியில் 53வது நிமிடத்தில் ஆஸ்திரேலியா 8வது கோல் அடித்தது.

ஆஸ்திரேலியா அபாரம்

ஆஸ்திரேலியா அபாரம்

இந்த போட்டியில் பதிலுக்கு ஒரு கோல் கூட பிரான்ஸ் அடிக்கவில்லை. இதன் மூலம் 8க்கு0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது. முன்னதாக தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்ட அர்ஜென்டினா அணி 1க்கு0 என்ற கோல் கணக்கில் வென்றது.

Story first published: Friday, January 13, 2023, 19:01 [IST]
Other articles published on Jan 13, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+