For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நடப்பு சாம்பியனான இந்தியாவுக்கு நேர்ந்த சோகம்..!! கண்ணீருடன் வெளியேற்றம்..!!

புபனேஸ்வர்: நாளைய நட்சத்திரங்களை கண்டறிவதற்காக ஜூனியர் ஹாக்கி போட்டி நடைபெறுவது வழக்கம்

2016ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற இந்த தொடரில் பெல்ஜியம் அணியை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றது

இந்த நிலையில் 2021 ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடர் ஓடிசாவின் புபவனேஸ்வர் நகரில் நடைபெற்றது. இதில் 16 அணிகள் பங்கேற்றன.

அரையிறுதி

அரையிறுதி

அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்தியாவும், 6 முறை சாம்பியனான ஜெர்மனியும் மோதின.போட்டி தொடங்கியதில் இருந்தே ஜெர்மனி வீரர்கள் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி, இந்தியாவை திணறடித்தனர். ஆட்டத்தின் முதல் 25 நிமிடத்திலேயே ஜெர்மனி அணி அடுத்தடுத்து 4 கோல் அடித்து 4க்கு0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

முதல் கோல்

முதல் கோல்

ஆனால், இந்தியா 25வது நிமிடத்தில் தான் முதல் கோலே அடித்தது.இதன் பின்னர் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பையும் இந்திய அணியின் துணை கேப்டன் சஞ்சய் குமார் தவறவிட்டார். ஆனால், இதன் பின்னர் ஜெர்மனியை கோல் அடிக்கவிடாமல் இந்தியா பார்த்து கொண்டது.

தோல்வி

தோல்வி

ஆனால் அதற்குள் ஆட்டம் கையை நழுவி போய்விட்டது. இதனையடுத்து ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் இந்தியா 2வது கோல் அடிக்க, ஜெர்மனி 4க்கு2 என்ற கணக்கில் வென்றது. இதனையடுத்து இந்தியா 3வது இடத்திற்கான ஆட்டத்தில் பிரான்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

இறுதிப் போட்டி

இறுதிப் போட்டி

இதே போன்று மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணியும், அர்ஜென்டினா அணியும் மோதின. இதில் இரு அணிகளும் கோல் அடிக்காததால் பெனால்டி சூட் அவுட் முறையில் 3க்கு1 என்ற கணக்கில் அர்ஜென்டினா அணி வென்றது. இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணியும், ஜெர்மனி அணியும் மோதுகின்றன

Story first published: Saturday, December 4, 2021, 13:55 [IST]
Other articles published on Dec 4, 2021
English summary
Defending champion India knocked out from Junior Hockey world cup. India thrashed by Germany by 4-2 in semi Final. India set to Play france for 3rd Place
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+