Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலக கோப்பை ஹாக்கி.. 3வது முறையாக ஜெர்மனி சாம்பியன்.. பரபரப்பான டிவிஸ்டில் நடந்த இறுதிப் போட்டி

புபனேஸ்வர் : உலக கோப்பை ஹாக்கி தொடரில் இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான பெல்ஜியத்தை ஜெர்மனி வீழ்த்தி, 3வது முறையாக கோப்பையை கைப்பற்றியது.

புபனேஸ்வரில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் பெல்ஜியம் அணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்தடுத்து கோல்களை அடித்தனர்.

போட்டியின் 10 மற்றும் 11வத நிமிடத்தில் பெல்ஜியம் அணி தொடர்ந்து 2 கோல்களை அடித்தது. 0க்கு2 என்ற கணக்கில் பின்தங்கிய ஜெர்மனி, பிறகு அதிரடியை காட்டி முன்னிலை பெற்றது.

போராட்ட குணம்

போராட்ட குணம்

ஆட்டத்தின் 29வது நிமிடம், 41வது நிமிடம் மற்றும் 48வது நிமிடத்தில் ஜெர்மனி அணி 3 கோல்களை அடித்து 3க்கு2 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இந்த தொடரில் ஜெர்மனி அணி பின்தங்கிய நிலையிலிருந்து கோல் அடித்து முன்னிலை பெற்றது இது 3வது முறை. இதிலிருந்து தோல்வியை ஒப்பு கொள்ளாமல் எப்படி ஜெர்மனி போராடி வெற்றி பெற்று இருக்கிறது என்று நமக்கு தெரிந்திருக்கும்.

போட்டி சமன்

போட்டி சமன்

இந்த நிலையில், ஜெர்மனி வெற்றியை நோக்கி நகர்ந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் ஆட்டத்தின் 59வது நிமிடத்தில் பெல்ஜியம் அணி தங்களது 3வது கோலை போட்டு ஆட்டத்தை சமன் செய்தனர். இதனையடுத்து வெற்றியாளர்களை தீர்மானிக்க பெனால்டி சூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது.

பெனால்டி சூட் அவுட்

பெனால்டி சூட் அவுட்

இதிலும் 5 வாய்ப்புகளில் ஜெர்மனி மற்றும் பெல்ஜியம் அணி தலா 3 முறை கோல் போட்டு அதிலும் சமனானது. இதனைத் தொடர்ந்து மீண்டும் பெனாலடி சூட் அவுட் கடைபிடிக்கப்பட்டது. அதில் ஜெர்மனி தொடர்ந்து 2 கோல்கள் போட, பெல்ஜியம் அணி ஒரு கோலை போட்டு, ஒரு கோலை தவறவிட, Sudden death ( அந்த நிலையில் யார் முன்னிலை பெற்றார்களோ, அவர்கள் வெற்றியாளர்) முறைப்படி ஜெர்மனி அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

ஜெர்மனி சாம்பியன்

ஜெர்மனி சாம்பியன்

இதற்கு முன்பு ஜெர்மனி 2002 மற்றும் 2006ஆம் ஆண்டு உலககோப்பையை வென்றது. இதன் மூலம் ஆஸ்திரேலியா, நெதர்லாந்துக்கு பிறகு 3 முறை உலக கோப்பையை வென்ற மூன்றாவது அணி என்ற பெருமையை ஜெர்மனி பெற்றது. உலக கோப்பை ஹாக்கி வரலாற்றில் பாகிஸ்தான் மட்டும் 4 முறை உலக கோப்பையை வென்று இருப்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து 2வது முறையாக இந்தியா, உலக கோப்பை ஹாக்கி தொடரை வெற்றிக்கரமாக நடத்தி இருப்பதாக, சர்வதேச ஹாக்கி சம்மேளனம் பாராட்டி உள்ளது.

Story first published: Monday, January 30, 2023, 0:05 [IST]
Other articles published on Jan 30, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+