Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலக கோப்பை ஹாக்கி- நாக் அவுட் சுற்றுக்கு இந்தியா தகுதி.. வெல்ஸ் அணியிடம் அபாரம்

ஓடிசா : உலக கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் வெல்ஸ் அணியிடம் பலப்பரீட்சை நடத்தியது.

இந்தப் போட்டியில் இந்திய அணி பெரிய கோல் வித்தியாசத்தில் வென்று நேரடியாக காலிறுதி சுற்றுக்கு தகுதி பெறும் முனைப்புடன்களமிறங்கியது.

வெல்ஸ் அணி இந்த தொடரில் பலம் குன்றி அணி என்பதால், இந்திய ரசிகர்கள் கோல் மழையை எதிர்பார்த்தனர். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது.

முதல் கோல்

முதல் கோல்

இந்திய அணியின் இளம் ஸ்டார் வீரர் ஹர்திக் இன்றைய ஆட்டத்தில் பங்கேற்கவில்லை. இதன் காரணமாக இந்திய அணியின் தடுப்பாட்டம் பலவீனமாக தோன்றியது. ஆட்டம் தொடங்கியதும், இரு அணிகளும் கோல் அடிக்கும் வாய்ப்பை வீணடித்தனர். இந்த நிலையில் ஆட்டத்தின் 21வது நிமிடத்தில் இந்திய அணிக்கு ஒரு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது, அதனை ஷம்சிர் சிங் கோலாக மாற்றினார்.

பதிலடி தந்த வெல்ஸ்

பதிலடி தந்த வெல்ஸ்

இதே போன்று ஆட்டத்தின் 32வது நிமிடத்தில் ஆகாஷ்தீப் சிங் தமககு கிடைத்த வாய்ப்பை கோலாக மாற்ற, இந்திய அணி 2க்கு0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இதனைத் தொடர்ந்து இந்திய அணிக்கு கிடைத்த 4 பெனால்டி கார்னர் வாய்ப்புகளை வீரர்கள் வீணடித்தனர். இந்த நேரத்தை பயன்படுத்தி கொண்ட வெல்ஸ் அணி வீரர்கள் 42 மற்றும் 44வது நிமிடங்களில் கோல் அடித்தனர்.

 அனல் பறந்தது

அனல் பறந்தது

இதனால் ஆட்டம் 2க்கு2 என்ற சமனில் இருந்ததால் ஆட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து சுதாரித்து கொண்டு விளையாடிய இந்திய வீரர்கள் அதிரடியில் இறங்கியதால் போட்டியில் அனல் பறந்தது. ஆட்டத்தின் 45வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை கோலாக மாற்ற மீண்டும் முன்னிலை பெற்றது.

 வெற்றி ஆனால்

வெற்றி ஆனால்

இதே போன்று ஆட்டத்தின் இறுதி நிமிடங்களில் கிடைத்த வாய்ப்பை இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஹர்மன்பிரித் சிங் கோலாக மாற்ற, 4க்கு2 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது. எனினும் இந்திய அணியால் புள்ளி பட்டியலில் 2வது இடத்தை மட்டுமே பிடிக்க முடிந்தது. இதன் காரணமாக காலிறுதிக்கு நேரடியாக தகுதி பெறாமல், கிராஸ் ஓவர் என்ற நாக் அவுட் ஆட்டத்தில் இந்திய அணி வரும் 22ஆம் தேதி நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.

Story first published: Thursday, January 19, 2023, 22:48 [IST]
Other articles published on Jan 19, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+