Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலக கோப்பை ஹாக்கி.. வெற்றியுடன் தொடரை நிறைவு செய்த இந்தியா.. 9வது இடத்தை பிடித்தது

ரூர்கேலா: உலக கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி தனது கடைசி போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்டது.

இந்திய அணி காலிறுதிக்கு முன்பு தொடரை விட்டு வெளியேறிய நிலையில், 9வது இடத்திலிருந்து 16வது இடத்திற்கான போட்டிகள் நடைபெற்றது.

இதில் இந்திய அணி, முதலில் ஜப்பானை எதிர்கொண்டு 8க்கு0 என்ற கோல் கணக்கில் வென்றது. இதனையடுத்து இன்று தென்னாப்பிரிக்காவுடன் பலப்பரீட்சை நடத்தியது.

அதிரடி ஆட்டம்

அதிரடி ஆட்டம்

போட்டி தொடங்கியதில் இருந்தே இந்திய அணி ஆக்கோரஷமாக விளையாடி தென்னாப்பிரிக்காவுக்கு அதிர்ச்சி அளித்தனர். இதனை பார்த்த ரசிகர்கள், அடபாவிங்களா இவ்வளவு நாள் இந்த மாதிரி ஏன்டா விளையாடல என்று கேள்வி கேட்கும் அளவுக்கு ஆட்டம் அமைந்தது.

அடுத்தடுத்து கோல்

அடுத்தடுத்து கோல்

ஆட்டம் தொடங்கியதுமே 4 வது நிமிடத்தில் கிடைத்த வாய்ப்பை அபிஷேக் கோலாக மாற்றினார்.இதனையடுத்து 11வது நிமிடத்தில் ஹர்மான்பிரித் சிங் தமக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை கோலாக மாற்றினார்.

கோல் மழை

கோல் மழை

இதனையடுத்து போட்டியின் 2வது மற்றும் மூன்றாவது பாதியில் இரண்டு அணி வீரர்களுமே கோல் அடிக்காத நிலையில், 44வது நிமிடத்தில் இந்திய அணி ஒரு கோலை போட ஸ்கோர் 3க்கு0 என்ற கணக்கில் உயர்ந்தது. கடைசி பாதியில் போட்டியில் கோல் மழை பொழிந்தது.

இந்தியா வெற்றி

இந்தியா வெற்றி

ஆட்டத்தின் 48வது நிமிடத்தில் மட்டும் இந்தியா ஒரு கோலும், தென்னாப்பிரிக்கா ஒரு கோலும் போட்டது. இதே போன்று ஆட்டத்தின் 58வது நிமிடத்தில் இந்திய அணி 5வது கோலை போட, 59வது நிமிடத்தில் தென்னாப்பிரிக்கா தங்களது 2வது கோலை போட்டனர். இதன் மூலம் இந்திய அணி 5க்கு2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

Story first published: Saturday, January 28, 2023, 23:00 [IST]
Other articles published on Jan 28, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+