Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலககோப்பை ஹாக்கி - ஜப்பானை துவம்சம் செய்த இந்தியா.. 8-0 என்ற கோல் கணக்கில் அபாரம்

ரூர்கேலா: உலக கோப்பை ஹாக்கி தொடரிலிருந்து இந்தியா வெளியேறிய நிலையில், தற்போது 9 மற்றும் 12 வது இடங்களுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது.

இதில் இந்திய அணி, இன்று ஜப்பானை எதிர்கொண்டது. நாக் அவுட் சுற்றில் நியூசிலாந்திடம் அடைந்த தோல்வியால் இந்திய ரசிகர்கள் அதிருப்தியில் இருந்தனர்.

இதனால் ரசிகர்களை உற்சாகப்படுத்த வேண்டிய உத்வேகத்தில் களமிறங்கிய இந்திய ஹாக்கி வீரர்கள் இன்றைய ஆட்டத்தில் கோல் மழையை பொழிந்தனர்,

கோல் இல்லை

கோல் இல்லை

இதில் ஆட்டம் தொடங்கியது இருந்த இருவரும் அதிரடியாக விளையாடினர். இரு அணிகளும் தங்களுக்கு கிடைத்த கோல் வாய்ப்பை வீணடித்தனர், இந்திய அணி ஆட்டத்தின் முதல் 30 நிமிடத்தில் 3 பெனால்டி கார்னர் வாய்ப்பையும், ஜப்பான் வீரர்கள் 2 பெனால்டி கார்னர் வாய்ப்பையும் வீணடித்தனர்.

அதிரடி ஆட்டம்

அதிரடி ஆட்டம்

இதனையடுத்து இந்திய வீரர்கள் தங்களது தாக்குதல் ஆட்டத்தை அதிகபடுத்தினர். இதனை தாக்கு பிடிக்க முடியாத ஜப்பான் வீரர்கள் நிலைக்குலைந்து போனார்கள். ஆட்டத்தின் 32வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை இந்திய அணி கோலாக மாற்றியது. இதனையடுத்து 35வது நிமிடத்தில் அபிஷேக் 2வது கோல் அடிக்க, அடுத்த 4வது நிமிடத்தில் இந்தியா 3வது கோலை அடித்தது.

கோல் மழை

கோல் மழை

இதே போன்று 43வது நிமிடத்தில் அபிஷேக் மீண்டும் கோல் அடிக்க இந்திய அணி 4க்கு0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெறறது. இதனையடுத்து ஆட்டத்தின் கடைசி 15 நிமிடத்திலும் இந்தியா தங்களது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 45வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கான்ர் வாய்ப்பை ஹர்மன்பிரித் சிங் 5வது கோலை அடித்தார்.

பந்தாடிய இந்தியா

பந்தாடிய இந்தியா

இதன் பிறகு போட்டியின் இறுதியில் தான் வீடியோ கேம் போல் இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். 58வது நிமிடத்தில் மட்டும் 2 கோல்கள் மற்றும் 59வது நிமிடத்தில் ஒரு கோல் என 2 நிமிடத்தில் 3 கோல்கள் அடிக்கப்பட்டது. இதன் மூலம் இந்திய அணி 8க்கு0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை பந்தாடியது. இதனையடுத்து இந்திய அணி தனது அடுத்த போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.

Story first published: Thursday, January 26, 2023, 22:38 [IST]
Other articles published on Jan 26, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+