உலககோப்பை ஹாக்கி - வெளியேறியது இந்தியா.. பெனால்டி சூட் அவுட்டில் நியூசியிடம் தோல்வி.. சோகம்
புபனேஸ்வர் : உலககோப்பை ஹாக்கி தொடரின் நாக் அவுட் சுற்றில் இந்திய அணி, நியூசிலாந்திடம் அதிர்ச்சி தோல்வியை தழுவியது.
இதன் மூலம் உலககோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி வெளியேறியது. 48 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி உலக கோப்பையை வெல்லும் என எதிர்பார்த்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இந்திய வீரர் ஹர்திக் சிங் இந்த ஆட்டத்தில் இடம்பெறாதது பெரும் பின்னடைவாக அமைந்தது. கிரிக்கெட்டை போல், ஹாக்கியிலும் நாக் அவுட்டில் இந்திய ரசிகர்களுக்கு நியூசிலாந்து அதிர்ச்சி அளித்திருக்கிறது.

அதிரடி தொடக்கம்
பரபரப்பான ஆட்டத்தின் முதல் பகுதியில் இந்திய அணி கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை வீணடித்தது. இதனையடுத்து ஆட்டத்தின் 17வது நிமிடத்தில் இந்திய வீரர் லலித் குமார் முதல் கோலை அடித்தார். இதனைத் தொடர்ந்து கிடைத்த 2 பெனால்டி வாய்ப்பை இந்தியா வீணடித்தாலும், ஆட்டத்தின் 24வது நிமிடத்தில் இந்திய வீரர் சுக்ஜித் சிங் 2வது கோலை போட்டார்.

நியூசியின் பதிலடி
இதனையடுத்து சுதாரித்து விளையாடிய நியூசிலாந்து ஆட்டத்தின் 28வது நிமிடத்தில் முதல் கோலை அடித்தது. இதன் பிறகு போட்டிய்ன 40வது நிமிடத்தில் இந்திய அணி 3வது கோலை அடித்தது. இதனைத் தொடர்ந்து நியூசிலாந்து ஆக்கோரஷமாக விளையாட 43 மற்றும் 49வது நிமிடத்தில் அடுத்தடுத்து 2 கோல்களை அடிக்க, போட்டியின் முடிவில் இரண்டு அணிகளும் 3க்கு3 என்ற கோல் கணக்கில் ஆட்டம் டிராவானது.

போட்டி சமன்
இதனைத் தொடர்ந்து வெற்றியாளரை தீர்மானிக்க பெனால்டி சூட் அவுட் நடந்தது. இதில் முதலில் நியூசிலாந்து 3 கோல்களை போட்டாலும் அடுத்த 2 கோல்களை பிரமாதமாக ஸ்ரீஜேஸ் தடுத்தார். ஆனால் அப்போது அவருக்கு காயம் ஏற்பட்டது.

நியூசி வெற்றி
இந்தியாவும் 3 கோல் அடிக்க 2வது முறையாக மீண்டும் னொல்டி சூட் கடைபிடிக்கப்பட்டது. அதில் இந்தியா ஒரு கோலை மட்டுமே அடிக்க, நியூசிலாந்து 2 கோலை அடித்தது, இதனையடுத்து 4க்கு5 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்து வென்றதாக அறிவிக்கப்பட்டது.


Click it and Unblock the Notifications