உலக கோப்பை ஹாக்கி - இங்கிலாந்துக்கு தண்ணீ காட்டிய இந்தியா.. பரபரப்பான ஆட்டத்தில் நடந்தது என்ன?
ரூர்கேலா : உலக கோப்பை ஹாக்கி தொடரின் டி பிரிவில் முதலிடத்தை பிடிக்கப் போகும் அணி எது என்ற இடத்தை தீர்மானிக்க இங்கிலாந்து , இந்திய அணிகளும் மோதின.
இன்றும் சுமார் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் மைதானத்தில் கண்டு களித்தனர். ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் விதமாக ஆட்டத்தின் முதல் பாதி அமைந்தது.
இதில் எந்த அணியும் தங்களுக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை கோலாக மாற்றவில்லை. இரு அணிகளுக்கும் ஏராளமான பெனால்டி கார்னர்கள் மற்றும் வாய்ப்புகள் இருந்தபோதிலும், அணிகள் சமநிலையில் முதல் பாதியை அடைந்தனர்.

வாய்ப்பு
இரண்டாவது பாதியில், மிட்ஃபீல்டர் ஹர்திக் சிங் சிறப்பான ஆட்டக்காரராக இந்திய அணிக்கு திகழ்ந்து ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தினார். போட்டியின் 3வது பகுதியில் மன்தீப் சிங் பந்தை கோலின் பின்புறத்தில் பெற்றார், ஆனால் கோலுக்கு முன்பே ஒரு தவறுக்காக விசில் அடிக்கப்பட்டது.

சமனில் முடிந்தது
இதே போன்று இங்கிலாந்து வீரர் பில் ரோப்பர் அடித்த பந்து கோலாக மாற இருந்த நிலையில், அதனை கோல் கீப்பர் ஸ்ரீஜேஸ் தடுத்தார். இதனால் இந்திய ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். . இறுதி ஸ்கோர்லைன் 0-0 ஆக இருந்தது, இந்த போட்டியில் இந்தியாவின் முக்கிய வீரர் ஹர்திக் சிங் காயம் காரணமாக வெளியேறியது ரசிகர்களுக்கு கவலையை கொடுத்து

வெல்ல கூடிய ஆட்டம்
இங்கிலாந்து கீப்பர் ஆலிவர் பெய்ன் ஆட்ட நாயகனாக விருது பெற்றார். இது குறித்து பேசிய அவர் ஒட்டுமொத்தமாக நாங்கள் ஒரு நல்ல ஆட்டத்தை கொண்டிருந்தோம், ஆனால் இன்று எங்களுக்கு கிடைத்த கோல் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளாதது சற்று ஏமாற்றம் அளிக்கிறது. இது நாங்கள் வெல்லக்கூடிய ஒரு விளையாட்டு. ஆனால் டிராவில் முடிந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் அடுத்த போட்டி
முன்னதாக ஸ்பெயின் அணியும், வெல்ஸ் அணியும் மோதியது. இந்த ஆட்டம் முழுவதும் ஆதிக்கம் செலுத்திய ஸ்பெயின் அணி 5க்கு1 என்ற கோல் கணக்கில் வென்றது. இதனையடுத்து இந்திய அணி தனது 3வது ஆட்டத்தில் வெல்ஸ் அணியுடன் வரும் 19ஆம் தேதி மோதுகிறது. இதில் இந்திய அணி அதிக கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டிய நிலையில் உள்ளது.


Click it and Unblock the Notifications