Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஹாக்கி - ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்தியா.. தோல்வி விழும்பில் இருந்து மீண்டு அபாரம்

சென்னை : ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி கோப்பையை இந்திய அணி நான்காவது முறையாக வென்று அசத்தியிருக்கிறது. சென்னையில் நடைபெற்ற இந்த தொடரில் இந்திய அணி தோல்வியே தழுவாமல் இறுதிப்போட்டி வரை வந்தது.

2007 ஆம் ஆண்டுக்கு பிறகு சென்னையில் இந்த தொடர் நடைபெறுவதால் தமிழக ரசிகர்கள் மத்தியில் இது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.பைனலில் மலேசியாவை இந்திய அணி எதிர்கொண்டது.

Hockey - Asian champions trophy final - India beat Malaysia 4-1

மலேசியா அணி தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி இந்தியாவுக்கு கடும் நெருக்கடி கொடுத்தது. எனினும் இந்திய அணி ஆட்டத்தின் ஒன்பதாவது நிமிடத்தில் முதல் கோலை அடித்தது. எனினும் மலேசியா அணி சுதாரித்துக் கொண்டு அபாரமாக விளையாடி அடுத்தடுத்து கோல்களை அடித்தனர். 14 ஆவது நிமிடத்தில் மலேசியா, முதல் கோலையும் 18 வது நிமிடத்தில் இரண்டாவது கோலையும் அடித்தது.

இதனால் இந்திய வீரர்கள் அதிர்ச்சியில் இருந்தனர். இதனை சமன் செய்வதற்கு இந்திய வீரர்கள் முயற்சித்த நிலையில், மலேசியா மூன்றாவது முறை கோல் போட்டு தமிழக ரசிகர்களுக்கு மகிழ்ச்சி கொடுத்தது .ஆட்டத்தின் முதல் பாதியில் மலேசியா மூன்றுக்கு ஒன்று என்ற கோலில் முன்னிலை பெற்று இருந்தது. இதனை எடுத்து இந்திய அணி வீரர்கள் ஆக்ரோசமாக விளையாடி ஆட்டத்தை சமன் செய்ய முயற்சித்தனர்.

ஆனால் மலேசிய வீரர்கள் சிம்ம சொப்பனமாக இருந்தார்கள். 45வது நிமிடத்தில் இந்தியாவின் கிடைத்த பெனால்டி ஸ்டோர்க் ஹர்மன் பிரித்சிங் கோலாக மாற்றினார். அதே நிமிடத்தில் இந்தியாவில் மூன்றாவது கோலை குர்ஜந்த் சிங் அடிக்க மைதானமே அதிர்ந்தது. இதனால் போட்டி மூன்றுக்கு மூன்று என்ற கணத்தில் இருந்த நிலையில் நான்காவது கோலை அடிக்க இரு அணிகளும் கடுமையாக போராடியதால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றி கொண்டது.

மலேசியாவுக்கு 50-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் கிடைத்தது. ஆனால் அதனை அவர்கள் தவற விட்டனர். ஆட்டத்தில் கடைசி பத்து நிமிடங்களில் இந்திய அணி அடுத்தடுத்து கோல் வாய்ப்பை மலேசியா கீப்பர் அரணாக நின்று தடுத்தார்.இந்த நிலையில் ஆட்டத்தின் 56வது நிமிடத்தில் இந்திய கோல அடிக்க இந்திய அணி 4க்கு3 என்ற கணக்கில் வென்றது. இதன் மூலம் இந்தியாவில் நான்காவது முறையாக ஆசிய கோப்பை சாம்பியன்ஸ் தொடரில் வென்று அசத்தியது.

Story first published: Saturday, August 12, 2023, 22:59 [IST]
Other articles published on Aug 12, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+