Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஹாக்கி - ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை.. இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி.. அரையிறுதியில் அபாரம்

மும்பை : ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் அரையிறுதியில் தென்கொரியாவை வீழ்த்திய இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருக்கிறது. சீனாவின் ஹூயின் பியூர் நகரில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் இன்று இந்தியா தென்கொரியாவை எதிர்கொண்டது.

இந்த போட்டியில் ஆரம்பத்தில் இருந்து இந்தியா ஆதிக்கம் செலுத்தியது இதனால் தென்கொரியாவின் தடுப்பாட்ட வீரர்கள் கடும் நெருக்கடிக்கு ஆளானார்கள். ஆட்டத்தில் 13வது நிமிடத்தில் இந்திய வீரர் உத்தம் சிங் முதல் கோல் அடிக்க இந்தியா ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

hockey asian champions trophy india vs south korea

இதனை அடுத்து கொரியாவுக்கு தொடர்ந்து இரண்டு முறை பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதனை கொரியா கோலாக மாற்ற முடியாமல் வீணடித்தது. இதை அடுத்து இரண்டாவது பகுதியில் நான்காவது நிமிடத்தில் இந்தியாவுக்கு ஒரு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது.

இதனை கேப்டன் ஹர்மன் பிரித் கோலாக மாற்ற இந்திய அணி இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இதன் மூலம் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையில் இந்திய வீரர் ஹர்மன் பிரித் தனது ஆறாவது கோலை அடித்தார். இந்த இடத்தில் போட்டியின் முதல் பாதி இறுதியில் தென்கொரியா அடித்த அபாரமான ஒரு கோல் சாட்டை இந்திய கோல் கீப்பர் சூரஜ் கார்கேரா தடுத்து அசத்தினார்.

இதை தொடர்ந்து ஆட்டத்தின் மூன்றாவது பகுதியில் இரண்டாவது நிமிடத்தில் இந்திய வீரர் சுமித் அடித்த பந்தை சர்களில் நின்ற ஜர்மன் பிரித் லாவமாக கோலாக மாற்றினார். இதன் மூலம் இந்திய அணி மூன்றுக்கு 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இதை அடுத்து கொரியா கடுமையாக போராடியதில் யாம் ஜூன் என்ற வீரர் தமக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை கோலாக மாற்றினார்.

இதன் மூலம் ஸ்கோர் மூன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் இருந்தது. எனினும் தென்கொரியா அடித்த இந்த கோல் இந்தியாவில் உத்வேகத்தை கொஞ்சம் கூட அசைக்கவில்லை. இந்தியா தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதை அடுத்து ஆட்டத்தின் 45 வது நிமிடத்தில் கொரிய கோல் கீப்பர் ஜெஹான் செய்த தவறால் அவருக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

இதனை அடுத்து கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை கேப்டன் ஹர்மன் பிரித் மீண்டும் கோலாக மாற்றினார். இதன் மூலம் இந்திய அணி நான்குக்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இதை அடுத்து இறுதிக்கட்டத்தில் கொரிய வீரர்களுக்கு அடுத்தடுத்து லட்டு போன்ற வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அனைத்தையும் இந்தியாவின் கோல் கீப்பர் சூரஜ் கார்கேரா அபாரமாக தடுத்து கொரியா மேலும் கோல் அடிக்காமல் பார்த்துக் கொண்டார்.

இதன் மூலம் இந்திய அணி நான்குக்கு ஒன்று என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதன் அடுத்து ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை வரலாற்றில் இந்தியா ஐந்தாவது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இதனை அடுத்து மற்றொரு அரை இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானும் சீனாவும் பல பரிட்சை நடத்தியது. இதில் இரண்டு அணிகளும் தலா ஒரு கோல் அடிக்க சூட் அவுட் முறையில் சீன அணி இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதை அடுத்து இறுதிப் போட்டியில் இந்தியாவும் சீனாவும் பலப்பரீட்சை நடத்துகிறது .இந்த போட்டி செப்டம்பர் 17ஆம் தேதி மதியம் மூன்று முப்பது மணிக்கு இந்திய நேரப்படி தொடங்குகிறது.

Story first published: Monday, September 16, 2024, 23:07 [IST]
Other articles published on Sep 16, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+