Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஹாக்கி உலகக்கோப்பையில் இன்று இந்தியா - தென்னாபிரிக்கா மோதல்… இளம் வீரர்கள் கொண்ட இந்தியா வெல்லுமா?

புவனேஸ்வர் : ஹாக்கி உலகக்கோப்பை தொடர் இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் இன்று முதல் துவங்க உள்ளது.

இந்த தொடருக்கான இந்திய ஹாக்கி அணியில் சுமார் 7 இளம்வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் ஏழு பேரும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பை தொடரை வென்ற இந்திய அணியில் இடம் பெற்றவர்கள்.

Hockey coach defended selection of Young players in the team ahead of world Cup

இது பற்றி இந்திய ஹாக்கி அணி பயிற்சியாளர் ஹரேந்திராவிடம் கேட்ட போது, "உங்களுக்கு பொறுமை வேண்டும். தேர்வாளர்கள் இளம் வீரர்கள் இந்திய அணியில் இடம் பிடிக்க தகுதி பெற்று இருக்கிறார்கள் என கருதுகிறார்கள். அதை நினைத்து நாம் பெருமைப்பட வேண்டும்" என கூறினார்.

இந்த ஹாக்கி உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெறுவதால் ரசிகர் கூட்டம் இந்தியாவிற்கு ஆதரவாக இருக்கும். இந்தியா ஹாக்கியில் எட்டு முறை ஒலிம்பிக் சாம்பியன் பட்டத்தை வென்று இருந்தது. ஆனால் 1975க்கு பின் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது. தற்போது இந்தியா ஓரளவு முன்னேறி வருகிறது.

சமீபத்தில் இந்திய ஹாக்கி அணி ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தோல்வி அடைந்து இருந்தது. அதை பற்றி நாங்கள் மறந்து விட்டோம் என்கிறார் ஹரேந்திரா. அதில் இருந்து நாம் கற்றுக் கொள்ளலாம். ஆனால், அதை மீண்டும் நினைவுபடுத்திப் பார்க்க வேண்டியதில்லை.

இந்தியா தன் முதல் போட்டியில் இன்று தென்னாபிரிக்கா அணியை சந்திக்கிறது. இந்த போட்டி மாலை 7 மணிக்கு துவங்க உள்ளது.

Story first published: Wednesday, November 28, 2018, 16:33 [IST]
Other articles published on Nov 28, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+