Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யார் மேல கை வைக்கிற.. பாகிஸ்தான் வீரரிடம் எகிறிய ஹர்மன்ப்ரீத்.. ஹாக்கியில் மிரளவிட்ட இந்தியா!

ஷாங்காய்: இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஹாக்கி போட்டியின் போது, இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் மற்றும் ஜர்மன்ப்ரீத் இருவரும் பாகிஸ்தான் வீரர் ராணாவுடன் மோதலில் ஈடுபட்ட சம்பவம் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது. இதில் ஏற்கனவே சீனா, ஜப்பான், மலேசியா மற்றும் கொரியா ஆகிய அணிகளை வீழ்த்தி இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது. இந்த நிலையில் கடைசி லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து இந்திய அணி களமிறங்கியது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் கோலை அடித்து மிரட்டியது.

ind vs pak

அதன்பின் கம்பேக் கொடுத்த இந்திய அணி, அடுத்தடுத்து 2 கோல்களை அடித்து முன்னிலை பெற்றது. இந்த 2 கோல்களையும் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் தான் அடித்து அசத்தினார். கடந்த போட்டியிலேயே 200 கோல்களை அடித்த வீரர் என்ற சாதனையை படைத்த அவர், இந்த போட்டியிலும் கோல்களை தொடர்ந்து விளாசியது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது.

இதன்பின் இரு அணிகளின் தரப்பிலும் எந்த கோல்களும் அடிக்கப்படவில்லை. இதனால் இந்திய அணி அபார வெற்றியை பெற்று அசத்தியது. இதனிடையே இந்தியா - பாகிஸ்தான் வீரர்கள் கடைசி நிமிடத்தில் கோல் அடிக்க தீவிரமாக இருந்த போது, களத்திலேயே மோதி கொண்ட விவகாரம் தெரிய வந்துள்ளது. ஆட்டத்தின் கடைசி 10 நிமிடங்கள் இருந்த போது, இந்திய சர்க்கிளுக்குள் இந்திய வீரர் ஜுக்ரஜ் சிங் - பாகிஸ்தான் வீரர் ராணா இருவரும் தடுமாறி விழுந்தனர்.

இதனால் கோபமடைந்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் மற்றும் ஜர்மன்ப்ரீத் சிங் இருவரும் ராணாவுக்கு பதிலடி கொடுத்த உடனே கொந்தளித்தனர். அப்போது கள நடுவர்கள் விரைவாக வீரர்களை தடுத்து நிறுத்த வந்த போது, பாகிஸ்தான் கேப்டன் அமாத் பட் இரு தரப்பையும் அமைதியாக்கும் பணியை செய்தார். இதனைத் தொடர்ந்து கள நடுவர் டிவி நடுவரிடம் முறையீடு செய்தார். அப்போது தவறு ராணாவின் மேல் இருப்பது தெரிய வந்தது.

இதன்பின் பாகிஸ்தான் வீரர் ராணாவுக்கு மஞ்சள் அட்டை வழங்கப்பட்டது. இதன் காரணமாக கடைசி 10 நிமிடங்களில் பாகிஸ்தான் அணி 10 வீரர்களுடன் தான் விளையாடியது. இருப்பினும் கடைசி வரை எந்த கோல்களும் அடிக்கப்படவில்லை. மேலும் 2016ஆம் ஆண்டில் இருந்தே இந்திய அணி பாகிஸ்தான் அணி மீது ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஆசியப் போட்டிகளில் பாகிஸ்தான் அணியை 10-2 என்ற கோல் கணக்கில் இந்தியா வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, September 15, 2024, 11:51 [IST]
Other articles published on Sep 15, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+