ஹாக்கி இந்தியா நிதி மோசடியில் ஈடுபட்டது – கே.பி.எஸ். கில் புகார்

இந்திய ஹாக்கியை முன்பு நிர்வகித்து வந்த அமைப்பு இந்திய ஹாக்கி சம்மேளனம். கடந்த2008ம் ஆண்டு எழுந்த ஊழல் குற்றச்சாட்டைத் தொடர்ந்து அந்த அமைப்பை அரசு கலைத்து விட்டது.அதன் பின்னர் ஹாக்கி இந்தியா அமைப்பு உருவாக்கப்பட்டது.
இந்த நிலையில், கலைக்கப்பட்ட இந்திய ஹாக்கி சம்மேளனத்தின் தலைவராக இருந்த கே.பி.எஸ்.கில் ஹாக்கி இந்தியா நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஹாக்கி இந்தியா அமைப்பு, தேவையில்லாமல் உலகக் கோப்பைக்கான நிதியை அதிகரித்து தேவையில்லாமல் அதை வீணடித்து முறைகேடு செய்துள்ளது.
கடந்த 2007ம் ஆண்டு சென்னையில் ஆசிய கோப்பைப் போட்டியை நாங்கள் நடத்தினோம்..இதற்கான செலவு வெறும்ரு.87 லட்சம் மட்டும்தான் ஆனது. ஆனால் இதே அளவிலான அணிகள், அதிகாரிகள், வசதிகளை மட்டுமே கொண்ட உலகக் கோப்பைப் போட்டிக்கு ரூ.15 கோடியை செலவிட்டதாக ஹாக்கி இந்தியா கூறுகிறது.
உண்மையில் உலக கோப்பைப் போட்டிக்கு ரூ.1 கோடிதான் பட்ஜெட்டாக ஒதுக்கப்பட்டது. ஆனால் இதை பின்னர் 15 கோடியாக உயர்த்தி அனாவசியமாக செலவிட்டு பணத்தை வீணடித்துள்ளனர்.
உலக கோப்பைப் போட்டிக்காக ஹாக்கி இந்தியா செலவிட்ட தொகை குறித்த விவரங்களை ஆர்.டிஐ.மூலம் கோரியுள்ளோம். ஆனால் உண்மையான தகவல் கிடைக்குமா என்பது சந்தேகம்தான்.
ஜூன்-ஜூலை மாதம்தேசியஅளவிலான ஹாக்கி போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றார் கில்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:37 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications