Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய ஹாக்கி ஜெர்ஸி காவி நிறத்திற்கு மாற்றம்.. பிசிசிஐயையும் காவிக்கு மாறுமா? வெடித்த சர்ச்சை

மும்பை: உலகக்கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணியின் ஜெர்சி காவி நிறத்திற்கு மாற்றப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியா என்றாலே அனைத்து விளையாட்டு போட்டிகளிலும் நீல நிறத்திற்கு தான் முக்கியத்துவம் வழங்கப்படும்.

இந்திய வீரர்களின் நீல நிற ஜெர்சி ஒவ்வொரு நாட்டு குடிமக்களின் இதயத்தில் கலந்த ஒரு நிறமாகவே இருந்து வருகிறது. கிரிக்கெட், ஹாக்கி, கால்பந்து, தடகள போட்டி என இந்திய வீரர்கள் நீல நிற ஜெர்சியையே அணிந்து விளையாடி வந்தனர்.

Hockey India

இந்த நிலையில் பெரும் அதிர்ச்சியை கிளப்பும் விதமாக ஹாக்கி விளையாட்டில் பலகாலமாக இருந்த நீல நிற ஜெர்சி தற்போது காவி நிறத்திற்கு மாற்றப்பட்டு இருக்கிறது. இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு விளக்கம் கொடுத்துள்ள ஹாக்கி இந்தியா, பெரும்பாலும் ஹாக்கி மைதானங்கள் நீல நிறத்தில் இருப்பதால் இந்திய வீரர்கள் நீல ஜெர்சியை அணிந்து இருப்பதன் மூலம் அது பார்வையாளர்களுக்கு சிக்கலை ஏற்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளது.

இதனால் நமது நாட்டின் கொடியில் உள்ள ஒரு நிறமான காவியை வைத்து ஹாக்கி ஜெர்சியை மாற்ற முடிவெடுத்து இருப்பதாகவும் இது நாட்டின் வரலாற்றையும் பலத்தையும் குறிப்பதாக ஹாக்கி இந்தியா சுட்டிக்காட்டி உள்ளது. எனினும் இது அரசியல் உலகில் பெரும் அதிர்வல்களை ஏற்படுத்தி இருக்கிறது.

பொதுவாக காவி நிறம் பாஜகவின் அரசியல் நிறமாக பார்க்கப்படுகிறது. மேலும் அது ஒரு மதத்தை மட்டுமே குறிக்கும் நிறமாகவும் கருதப்படுகிறது. இதனால் பாஜக விளையாட்டிலும் காவி நிறத்தை புகுத்தி அரசியலை புகுத்தி விட்டதாக பலரும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் இது வெறும் ஆரம்பம் தான் என்றும், ஹாக்கி இந்தியாவை பின்பற்றி பிசிசிஐ மற்றும் இந்திய கால்பந்து சம்மேளனம் அனைத்தும் இனி இந்திய அணியின் ஜெர்சியை காவி நிறத்திற்கு மாற்ற முயற்சி நடப்பதாக விளையாட்டு ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

ஏற்கனவே 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணி ஒரு சில போட்டியில் காவி நிறத்தை கொண்ட ஜெர்சியை அணிந்து விளையாடியது. அது மட்டுமில்லாமல் பயிற்சிக்கான உடையை காவி நிறத்தில் மாற்றி இருந்தது. இதனால் ஹாக்கியை பின்தொடர்ந்து ஒவ்வொரு விளையாட்டிலும் காவி நிறம் ஜெர்சியில் இடம்பிடிக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

நீ இல்லமா உலககோப்பை அணியா? அவரிடம் பேசி விளையாட வைப்பேன்.. அஸ்வின் சூளுரை

நீ இல்லமா உலககோப்பை அணியா? அவரிடம் பேசி விளையாட வைப்பேன்.. அஸ்வின் சூளுரை

எனினும் இதற்கு கிரிக்கெட் ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். நீலம் என்பது தங்களது வாழ்க்கையில் ஒன்றாக மாறிவிட்டதாகவும், இந்திய அணியை வேறு நிற ஜெர்சியின் பார்ப்பது மிகவும் கொடுமையானது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். உலகக்கோப்பை ஹாக்கி தொடர் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி நெதர்லாந்து மட்டும் பெல்ஜியம் நாட்டில் தொடங்குகிறது இதில் 16 அணிகள் பங்கேற்கின்றது.

Story first published: Friday, July 31, 2026, 21:35 [IST]
Other articles published on Jul 31, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+