For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஹாக்கி - மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை: தொடர்ந்து 2வது முறையாக வென்று இந்திய அணி சாதனை

பீஹார் : மகளிருக்கான ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரில் சீனாவை வீழ்த்தி இந்திய அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருக்கிறது. பீகாரில் நடைபெற்ற ராஜ்கீர் ஹாக்கி மைதானத்தில் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி சீனாவை எதிர்கொண்டது.

இந்தப் போட்டியில் இரு அணி வீராங்கனைகளும் கடுமையாக போராடி கோல்களை அடிக்க போராடினர். குறிப்பாக இந்த போட்டி முழுவதும் இந்திய அணி பந்தை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு இருந்தார்கள்.

india vs china asian hockey champion trophy

எனினும் சீன வீராங்கனைகள் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டதால் முதல் பாதியில் இரு அணி வீராங்கனைகளும் கோல் அடிக்க முடியவில்லை. இந்த சூழலில் ஆட்டத்தின் இரண்டாவது பகுதியில் இந்திய வீராங்கனைகள் அதிரடியாக விளையாடி நான்கு பெனால்டி கார்னரை பெற்றனர். எனினும் அந்த நான்கையும் இந்திய வீராங்கனைகளால் கோலாக மாற்ற முடியவில்லை.

இந்த தருணத்தில் தான் ஆட்டத்தின் மூன்றாவது பகுதியில் இந்திய வீராங்கனை தீபிகா தமக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை கோலாக மாற்ற இந்திய அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.இதனை அடுத்து பதில் கோல் அடித்து போட்டியை சமன் செய்ய சீன வீராங்கனைகள் எவ்வளவோ போராடியும், அது தோல்வியில் முடிந்தது.

இந்த சூழலில் உலகில் நம்பர் ஆறாவது அணியாக இருக்கும் சீனாவை இந்தியா தங்களது அபார ஆட்டத்தால் வீழ்த்தி தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி கோப்பையை கைப்பற்றி இதற்கு முன்பு இந்திய அணி 2016 மற்றும் 13ஆம் ஆண்டு மகளிர் சாம்பியன் கோப்பையில் வென்று அசத்தியிருக்கிறது.

இந்த சூழலில் இந்தியாவுக்கு தங்கமும், சீன அணிக்கு வெள்ளிப் பதக்கமும் கிடைத்தது. வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் ஜப்பான் மலேசியா அணிகள் பல பரிட்சை நடத்தியது. இதில் ஜப்பானின் நான்குக்கு ஒன்று என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று வெண்கல பதக்கத்தை தட்டி சென்றது.

Story first published: Wednesday, November 20, 2024, 20:10 [IST]
Other articles published on Nov 20, 2024
English summary
Hockey - India Womens Team won the 2nd consecutive Asian Hockey Champions trophy title மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை: தொடர்ந்து 2வது முறையாக வென்று இந்திய அணி சாதனை
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+