Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒலிம்பிக் ஹாக்கி.. அர்ஜென்டினாவை வீழ்த்திய இந்திய ஆண்கள்... 2-1 கோல் கணக்கில் வெற்றி !

ரியோ டி ஜெனிரே: ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் அர்ஜென்டினா அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய ஆடவர் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

பிரேசிலின் டி ஜெனிரோ நகரில் 31-வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி ஸ்ரீஜேஷ் தலைமையில் களமிறங்கியுள்ளது.

Hockey men: India beat Argentina 2-1

பி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, இன்று 3வது லீக்கில் அர்ஜென்டினா அணியுடன் மோதியது. போட்டியின் 7வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை தவறவிட்டனர். அடுத்த நிமிடத்தில் மற்றொரு வாய்ப்பை சரியாக பயன்படுத்திய சிங்கல் சேனா அதை கோலாக மாற்றினார்.

இதையடுத்து முதல் பாதியில் 1-0 என இந்தியா முன்னிலை பெற்றது. தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணிக்கு 35வது நிமிடத்தில் கோத்தாஜித் ஒரு கோல் அடிக்க 2-0 என முன்னிலை பெற்றது.

பின்னர் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அர்ஜென்டினா அணியினர் கோல் அடிக்க கடுமையாக முயற்சி செய்தனர். இதனிடையே போட்டியின் 49 நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பில் அந்த அணி வீரர் கொன்ஜாலோ ஒரு கோல் அடித்தார்.

முடிவில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி வெற்றி பெற்றது. அர்ஜென்டினாவை வென்றதன் மூலம் பி பிரிவில் 2வது இடம் பிடித்துள்ளது இந்தியா. முன்னதாக இந்திய அணி, அயர்லாந்து அணியுடன் வெற்றியும் ஜெர்மனி அணியுடன் தோல்வியும் அடைந்துள்ளது.

Story first published: Tuesday, August 9, 2016, 21:34 [IST]
Other articles published on Aug 9, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+