Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலகக் கோப்பை ஹாக்கி: இங்கிலாந்திடமும் தோல்வியடைந்தது இந்தியா!

திஹேக்: உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் 2வது ஆட்டத்தில் இங்கிலாந்திடமும் இந்தியா தோல்வி அடைந்துள்ளது.

13-வது உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி நெதர்லாந்தில் உள்ள திஹேக்கில் நடைபெற்று வருகிறது. வருகிற 15-ந் தேதி வரை நடைபெறும் இப் போட்டியில் பங்கேற்றுள்ள 12 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு பிரிவிலும் இடம் பிடித்துள்ள அணிகள், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் ஆட்டங்கள் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும்.

பெல்ஜியத்திடம் பரிதாப தோல்வி

பெல்ஜியத்திடம் பரிதாப தோல்வி

ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் 2-3 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்திடம் தோல்வி கண்டது.

இங்கிலாந்துடன் மோதல்

இங்கிலாந்துடன் மோதல்

நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்திய அணி, இங்கிலாந்தை எதிர்கொண்டது.

26வது நிமிடத்தில் இங்கிலாந்து கோல்

26வது நிமிடத்தில் இங்கிலாந்து கோல்

ஆட்டத்தின் தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்திய இங்கிலாந்து அணிக்கு 26-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை டிக்சன் கோலாக்கினார்.

அசத்திய தரம்வீர் சிங்

அசத்திய தரம்வீர் சிங்

அதன்பின்னர் இந்திய வீரர் தரம்வீர் சிங் 30-வது நிமிடத்தில் அசத்தல் கோல் அடிக்க, முதல் பாதியில் 1-1 என ஆட்டம் சமநிலையில் இருந்தது.

விறுவிறு இரண்டாம் பகுதி

விறுவிறு இரண்டாம் பகுதி

இதனால் இரண்டாவது பாதி ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருந்தது. இரு தரப்பினரும் கோல் அடிக்க கடுமையாகப் போராடினர்.

69வது நிமிடத்தில் கோல் அடித்த இங்கிலாந்து

69வது நிமிடத்தில் கோல் அடித்த இங்கிலாந்து

கடைசிவரை விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் 69-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பில் இங்கிலாந்து வீரர் மேன்டெல் ஒரு கோல் அடித்தார்.

மீண்டும் தோல்வி

மீண்டும் தோல்வி

இதனால், இந்திய அணி 1-2 என்ற கோல்கணக்கில் தோல்வியடைந்தது. இந்தியா எதிர்கொண்ட 2 போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியிருக்கிறது.

Story first published: Tuesday, June 3, 2014, 11:44 [IST]
Other articles published on Jun 3, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+