Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

43 வருடம் கழித்து அரையிறுதிக்கு செல்ல வாய்ப்பு.. இந்தியா - நெதர்லாந்து ஹாக்கி உலகக்கோப்பை காலிறுதி

புபனேஸ்வர் : ஹாக்கி உலகக்கோப்பை 2018இல் டிசம்பர் 13 அன்று இந்தியா - நெதர்லாந்து காலிறுதிப் போட்டி நடை பெற உள்ளது.

இந்தியா கடைசியாக 1975ஆம் ஆண்டில் தான் ஹாக்கி உலகக்கோப்பை அரையிறுதியில் ஆடியது. சுமார் 43 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஹாக்கி உலகக்கோப்பை அரையிறுதியில் இந்தியா பங்கேற்குமா? இது தான் இன்றைய காலிறுதிப் போட்டியின் பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.

Hockey World cup 2018 - India vs Netherlands Quarterfinal match

இந்தியாவை எதிர்த்து ஆடும் நெதர்லாந்து அணியும் சாதாரணமான அணியல்ல. இந்தியாவிற்கு இந்த காலிறுதிப் போட்டி அத்தனை எளிமையானதாக இருக்காது.

உலகக்கோப்பை போட்டிகளில் இதுவரை நெதர்லாந்து அணியை ஆறு முறை சந்தித்துள்ள இந்தியா, இதுவரை அதில் ஒரு போட்டி கூட வென்றதில்லை. ஐந்து போட்டிகளில் தோல்வியும், ஒரு போட்டியில் டிராவும் பெற்றுள்ளது இந்தியா.

நெதர்லாந்து அணியுடன் இந்தியா இதுவரை 105 போட்டிகளில் விளையாடி 33 போட்டிகளில் வெற்றியும், 48 போட்டிகளில் தோல்வியும் பெற்றுள்ளது. மீதமுள்ள போட்டிகள் டிராவில் முடிந்தவை.

இந்திய ரசிகர்கள் இந்த போட்டியைக் காண பெருமளவில் வருவார்கள் என்பதால் இந்திய அணிக்கு ஒருவித அழுத்தமும் ஏற்படும், அதே சமயம் மக்களின் ஆதரவு உத்வேகமும் அளிக்கும். இந்தியா இந்த காலிறுதியில் வெற்றி பெறுமா?

மற்றொரு காலிறுதியில் பெல்ஜியம் - ஜெர்மனி அணிகள் மோத உள்ளன. இந்த போட்டி மாலை ஐந்து மணிக்கு நடைபெறும். இந்தியா - நெதர்லாந்து போட்டி மாலை ஏழு மணிக்கு நடைபெறும்.

Story first published: Thursday, December 13, 2018, 10:17 [IST]
Other articles published on Dec 13, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+