For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சக் தே இந்தியா..!! ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி அரையிறுதியில் இந்தியா..!

புபனேஸ்வர்; ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடரின் காலிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்தியாவும், கடந்த முறை இறுதிப் போட்டி வரை வந்த பெல்ஜியம் அணியும் மோதின.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் சிறப்பான தடுப்பு ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இஷானுக்கு பதிலாக ஏன் சூர்யகுமார்? 3 மிக முக்கிய காரணங்கள்.. கடைசி நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு! இஷானுக்கு பதிலாக ஏன் சூர்யகுமார்? 3 மிக முக்கிய காரணங்கள்.. கடைசி நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு!

போட்டி தொடங்கியதில் இருந்தே பெல்ஜியம் வீரர்கள் அதிரடியாக விளையாடி இந்தியாவுக்கு அழுத்தத்தை கொடுத்தனர்.

அதிரடி

அதிரடி

இதனையடுத்து இந்திய வீரர்கள் , பெல்ஜியம் முன் கள வரிசை வீரர்களை குறி வைத்து, அவர்களின் அதிரடி ஆட்டத்திற்கு பதிலடி தந்தனர். ஆட்டத்தின் 13வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் தியாபு அடித்த கோல் வாய்ப்பை, இந்திய கோல் கீப்பர் பிரசாந்த் சவுகான் தடுத்தார்.இதே போன்று அடுத்த சில நிமிடங்களில் இந்திய வீரர் உத்தம் சிங், அடித்த கோல் வாய்ப்பை, பெல்ஜியம் கோல் கீப்பர் போரிஸ் தடுத்தார்.

கோல்

கோல்

இதனைத் தொடர்ந்து ஆட்டத்தின் 21வது நிமிடத்தில் இந்தியாவுக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைக்க, அதனை இந்திய வீரர் திவாரி கோலாக மாற்றினார். இதனை சமன் செய்ய பெல்ஜியம் வீரர்கள் போராடியும் பலன் அளிக்கவில்லை. குறிப்பாக 26வது நிமிடத்தில் கிடைத்த கோல் வாய்ப்பை பெல்ஜியம் வீணடித்தது.

வெற்றி

வெற்றி

இதே போன்று 50வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை, இந்தியாவின் 2வது கோல் கீப்பர் பவன் அபாரமாக தடுத்தார். இதன் மூலம் 1க்கு0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது. ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் பெல்ஜியத்திடம் இந்தியா வீழ்ந்ததே இல்லை என்ற சாதனை தொடர்கிறது.

மற்ற ஆட்டங்கள்

மற்ற ஆட்டங்கள்

இதேனிடையே, மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் அணியை பெனால்டி முறையில் 3க்கு1 என்ற கணக்கில் ஜெர்மனி அணி வென்றது. மற்றொரு காலிறுதியில் மலேசியாவை 4க்கு 0 என்ற கணக்கில் பிரான்சும், நெதர்லாந்தை 2க்கு1 என்ற கணக்கில் அர்ஜென்டினாவும் வென்றது. அரையிறுதி ஆட்டத்தில் பலம் வாய்ந்த ஜெர்மனியை இந்தியா எதிர்கொள்கிறது.

Story first published: Thursday, December 2, 2021, 17:48 [IST]
Other articles published on Dec 2, 2021
English summary
India Beat Belgium 1-0 in Junior World cup Hockey Quaterfinals. India never lost a match against Belgium in Junior World cup. India Faces Germany in semi Final
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X