Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அசத்தல் துவக்கம்.. ஹாக்கி உலகக்கோப்பையில் தெ.ஆபிரிக்காவை வீழ்த்தியது இந்திய அணி

புவனேஸ்வர் : 2018 ஹாக்கி உலகக்கோப்பையில் தன் முதல் போட்டியில் இந்தியா தென்னாபிரிக்க அணியை 5-0 என வீழ்த்தியது.

2018 ஹாக்கி உலகக்கோப்பை போட்டிகள் ஒடிசா மாநிலத்தில் இன்று முதல் துவங்கியது. நேற்று துவக்க விழா பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில், இன்று முதல் குரூப் சுற்று போட்டிகள் துவங்கின.

India beat Southafrica in its first encounter in Hockey World cup 2018

முதல் போட்டியில் இந்தியா, தென்னாபிரிக்கா அணியை சந்தித்தது. இந்திய ஹாக்கி அணியில் சுமார் 7 இளம்வீரர்கள் இடம் பெற்றனர். இவர்கள் ஏழு பேரும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பை தொடரை வென்ற இந்திய அணியில் இடம் பெற்றவர்கள்.

மாலை 7 மணிக்கு துவங்கியது இந்தியா - தென்னாபிரிக்கா போட்டி. இந்தியா துவக்கம் முதலே அபாரமாக ஆடியது. இந்தியா 5 கோல்கள் போட்டது. தென்னாபிரிக்க அணி ஒரு கோல் கூட போட முடியாமல் தடுமாறியது. இந்தியா 5-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

இதன் மூலம் இந்திய அணி தன் முதல் போட்டியை வெற்றியுடன் துவக்கி உள்ளது. இந்திய அணியில் மந்தீப் சிங் 1, அக்ஷன்தீப் சிங் 1, லலித் உபாத்யாய் 1 கோலும், சிம்ரன்ஜீத் சிங் 2 கோல்களும் போட்டு அசத்தினர்.

அடுத்து இந்திய அணி பெல்ஜியம் அணியை டிசம்பர் 2 அன்று சந்திக்க உள்ளது.

Story first published: Wednesday, November 28, 2018, 21:29 [IST]
Other articles published on Nov 28, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+