Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலக கோப்பை ஹாக்கி.. வெற்றியுடன் தொடங்கிய இந்தியா.. 200வது கோல் அடித்து அசத்தல்

ரூர்கேலா : உலக கோப்பை ஹாக்கி தொடரில் இந்தியா தனது முதல் ஆட்டத்தை ஸ்பெயினுடன் பலப்பரீட்சை நடத்தியது.

ரூர்கேலாவில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஹாக்கி மைதானம் உலகின் மிகப் பெரிய ஹாக்கி மைதானம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்தியா போட்டியை பார்க்க, சுமார் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் டிக்கெட்களை வாங்கினர்.

டி பிரிவில் இடம்பிடித்துள்ள இந்திய அணி தரவரிசையில் 6வது இடத்தில் உள்ளது. தரவரிசையில் 8வது இடத்தில் இருந்த ஸ்பெயினுடன் மோதிய இந்த ஆட்டம், ஒரு பிளாக்பஸ்டராக அமைந்தது.

பெனால்டி கார்னர்

பெனால்டி கார்னர்

போட்டி தொடங்கியதில் இருந்தே கோல் அடிக்க, இரண்டு அணிகளும் கடுமையாக போராடியதால் ஆட்டத்தில் அனல் பறந்தது. இந்திய அணிக்கு ஆட்டத்தின் 11 வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை கோலாக மாற்றமல் வீணடித்தது. எனினும் அடுத்த நிமிடமே பெனால்டி கார்னர் வாய்ப்பு மீண்டும் கிடைத்தது.

200வது கோல்

200வது கோல்

இதனை சொந்த மண்ணில் விளையாடும் ரோஹிதாஸ் அமித் கோலாக மாற்றினார். இதன் மூலம் உலக கோப்பை ஹாக்கி வரலாற்றில் இந்திய அணி 200 கோல்களை அடித்து சாதனை படைத்துள்ளது. இந்த பட்டியலில் 313 கோல்களுடன் ஆஸ்திரேலியாவும்,267 கோல்களுடன் நெதர்லாந்து 2வது இடத்திலும், 235 கோல்களுடன் பாகிஸ்தான் 3வது இடத்திலும், இந்தியா தற்போது 4வது இடத்திலும் உள்ளது.

2வது கோல்

2வது கோல்

இதனையடுத்து ஆட்டத்தின் 26வது நிமிடத்தில் கிடைத்த வாய்ப்பை ஹர்திக் சிங் கோலாக மாற்ற, இந்திய அணி 2க்கு 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இதே போன்று ஆட்டத்தின் 32வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி ஸ்டோக் வாய்ப்பை இநதியா வீணடித்தது. இதே போன்று ஸ்பெயின் வீரர்களின் கோல் வாய்ப்பை, இந்தியா கோல் கீப்பர் பதாக் முதல் பாதியில் அபாரமாக தடுத்தார்.

இந்தியா வெற்றி

இந்தியா வெற்றி

இதன் மூலம் இந்திய அணி 2க்கு0 என்ற கோல் கணக்கில் வென்று தற்போது புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது இந்திய அணி வரும் 15ஆம் தேதி அடுத்த ஆட்டத்தில் பலம் வாய்ந்த இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. இதற்கு முன்பு நடைபெற்ற மற்றொரு லீக் ஆட்டத்தில் வெல்ஸ் அணியை இங்கிலாந்து 5க்கு0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

Story first published: Friday, January 13, 2023, 21:50 [IST]
Other articles published on Jan 13, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+