நாங்க ஒலிம்பிக்கில் தங்கம் வாங்கினவங்க…. பெல்ஜியத்திடம் கெத்து காட்டிய இந்தியா!
ஹாமில்டன்: நான்கு நாடுகளுக்கு இடையேயான ஹாக்கி போட்டியின் இரண்டாவது சுற்றில் பெல்ஜியத்துக்கு எதிரான ஆட்டத்தில் 5-4 என்ற கோல் கணக்கில் இந்தியா வென்றது.
இந்தியா, ஜப்பான், பெல்ஜியம், நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான, நான்கு நாடுகள் அழைப்பு ஹாக்கி போட்டி நியூசிலாந்தில் நடக்கிறது. இரண்டு சுற்றுகளாக நடக்கும் இந்தப் போட்டியின் முதல் சுற்றின் பைனலில் பெல்ஜியம் அணியிடம் இந்தியா தோல்வி அடைந்தது.

தற்போது இரண்டாவது கட்ட ஆட்டங்கள் துவங்கியுள்ளது. இதில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வென்றது.
நேற்று நடந்த இரண்டாவது ஆட்டத்தில் பெல்ஜியம் அணியுடன் இந்தியா மோதியது. முதல் சுற்றின் லீக் மற்றும் பைனல்சில் பெல்ஜியம் அணியிடம் இந்தியா தோல்வியடைந்திருந்தது.
இந்த நிலையில், நேற்று நடந்த ஆட்டத்தில், தனது முழு வேகத்தை இந்தியா காட்டியது ருபிந்தர் பால் சிங் (4, 42வது நிமிடம்), ஹர்மன்பிரீத் சிங் (46வது நிமிடம்), லலித் உபாத்யாய் (53வது நிமிடம்), தில்பிரீத் சிங் (59வது நிமிடம்) கோலடித்தனர்.
அடுத்ததாக ஜப்பானுடன் இந்தியா மோத உள்ளது.
Story first published: Friday, January 26, 2018, 16:35 [IST]
Other articles published on Jan 26, 2018


Click it and Unblock the Notifications