நியூசிலாந்தை வென்றது இந்திய ஹாக்கி அணி
தரங்கா (நியூசிலாந்து): நியூசிலாந்தில் நடக்கும் 4 நாடுகள் அழைப்பு ஹாக்கி போட்டியின் இரண்டாவது கட்டத்தின் முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை 3-2 என்ற கோல் கணக்கில் இந்தியா வென்றது.
இந்தியா, ஜப்பான், பெல்ஜியம், நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான, நான்கு நாடுகள் அழைப்பு ஹாக்கி போட்டி நியூசிலாந்தில் நடக்கிறது. இரண்டு கட்டங்களாக நடக்கும் இந்தப் போட்டியின் முதல் கட்டத்தின் பைனலில் பெல்ஜியம் அணியிடம் இந்தியா தோல்வி அடைந்தது.

தற்போது இரண்டாவது கட்ட ஆட்டங்கள் துவங்கியுள்ளது. இதில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வென்றது.
ஆட்டத்தின் 7வது நிமிடத்தில் லலித் உபாத்யாய் கோலடித்து அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். நியூசிலாந்து அணி 23 வது நிமிடத்தில் கோலடித்து சமன் செய்தது. அடுத்தது 32 வது நிமிடத்தில் ஹர்ஜீத் சிங், 36வது நிமிடத்தில் ருபிந்தர் பால் சிங் கோலடிக்கு இந்தியா 3-1 என முன்னிலை பெற்றது.
ஆனால், 37வது நிமிடத்தில் கோலடித்து, 3-2 என முன்னிலையை நியூசிலாந்து குறைத்தது. அதன்பிறகு கோலடிக்க இரு அணிகளுக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதையடுத்து 3-2 என்ற கணக்கில் இந்தியா வென்றது.
மற்றொரு ஆட்டத்தில் பெல்ஜியம் அணி, ஜப்பானை வென்றது. இந்தியா அடுத்தாக பெல்ஜியத்துடன் மோதுகிறது.
Story first published: Thursday, January 25, 2018, 23:03 [IST]
Other articles published on Jan 25, 2018


Click it and Unblock the Notifications