For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

லீக்ல தோத்தாலும் இன்னொரு சான்ஸ் கிடைக்கும்… ஆனால் நாக்அவுட் தோத்தால் வூட்டுக்குதான் போகணும்

By Staff

புவனேஸ்வர்: ஹாக்கி உலக லீக் பைன்ல்ஸ் லீக் சுற்றில் ஒன்றில் கூட வெற்றி பெறாத இந்திய அணி, கால் இறுதியில் பெல்ஜியம் அணியை சந்திக்கிறது.

ஹாக்கியில் சர்வதேச தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள அணிகள் பங்கேற்கும் உலக ஹாக்கி லீக் பைனல்ஸ் தொடர் போட்டிகள் ஒடிசாவில் நடந்து வருகிறது.

India to face Belgium in World hockey league finals quarter finals

இதில் பி பிரிவில் உள்ள இந்திய, தனது முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியிடம் 3-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. இரண்டாவது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவிடம் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது. மூன்றாவது லீக் போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில், ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற ஜெர்மனியிடம் தோல்வியடைந்தது.

ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாமல், ஒரு புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தை இந்திய அணி பிடித்தது. ஏ பிரிவில் முதலிடம் பெற்ற பெல்ஜியம் அணியுடன் கால் இறுதியில் இந்தியா மோதுகிறது.

நேற்று நடந்த ஏ பிரிவு ஆட்டத்தில், பெல்ஜியம் 3-0 என்ற கணக்கில் நெதர்லாந்து அணியை வென்றது. தான் விளையாடிய மூன்று ஆட்டங்களிலும் பெல்ஜியம் வென்றுள்ளது.

மற்ற கால் இறுதி ஆட்டங்களில் ஸ்பெயின் - ஆஸ்திரேலியா, இங்கிலாந்து - ஆர்ஜென்டினா, ஜெர்மனி - நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.

பெல்ஜியம் அணியுடன் இந்தியா இதுவரை 71 போட்டிகளில் மோதியுள்ளது. அதில், 45ல் இந்தியா வென்றுள்ளது, 10ல் டிரா கண்டுள்ளது. பெல்ஜியம் 17 முறை வென்றுள்ளது.

ஆனால், கடைசியாக விளையாடிய நான்கு போட்டிகளில் மூன்றில் பெல்ஜியம் வென்றுள்ளது. உலகச் சாம்பியன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டிரா செய்த அணி, ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற பெல்ஜியத்தை சமாளிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

Story first published: Wednesday, December 6, 2017, 13:16 [IST]
Other articles published on Dec 6, 2017
English summary
India to face Belgium in World hockey league finals quarter finals
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+