Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பெண்கள் உலகக் கோப்பை ஹாக்கி.... இங்கிலாந்தை சந்திக்கிறது இந்தியா!

லண்டன்:பெண்கள் ஹாக்கி உலகக் கோப்பையில் நாளை இரவு 6.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியன் இங்கிலாந்தை சந்திக்கிறது இந்தியா.

16 நாடுகள் பங்கேற்கும் பெண்கள் ஹாக்கி உலகக் கோப்பை போட்டிகள் நாளை துவங்குகின்றன. கடந்த உலகக் கோப்பைக்கு தகுதி பெறாத இந்தியா இந்த முறை மிகவும் வலுவான அணியுடன் களமிறங்கியுள்ளது.

india to face england in the women hockey world cup


இங்கிலாந்து, அமெரிக்கா, அயர்லாந்து ஆகிய அணிகளுடன் பி பிரிவில் இந்தியா இடம்பெற்றுள்ளது. நாளை நடக்கும் ஆட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியனான இங்கிலாந்தை இந்திய பெண்கள் அணி சந்திக்கிறது. அதைத் தொடர்ந்து 26ம் தேதி அமெரிக்காவையும், 29ம் தேதி அயர்லாந்தையும் சந்திக்கிறது.

கடைசியாக 2010ல் நடந்த உலகக் கோப்பையில் இந்திய பெண்கள் அணி விளையாடியது. அப்போது 9வது இடத்தைப் பிடித்தது. அந்த உலகக் கோப்பையில் விளையாடிய ராணி ராம்பால் உள்பட 2 பேர் தற்போதைய அணியில் உள்ளனர்.

இதுவரை 6 முறை உலகக் கோப்பையில் பங்கேற்றுள்ள இந்திய அணி, 1974ல் நடந்த முதல் உலகக் கோப்பையின்போது 4வது இடத்தைப் பிடித்தது.

உலகத் தரவரிசையில் டாப் 10க்குள் நுழைந்தது, காமன்வெல்த் போட்டியில் நான்காவது இடத்தைப் பிடித்தது என, இந்திய அணி தற்போது மிகவும் வலுவாகவும் நம்பிக்கையுடன் உள்ளது. பைனல் நுழைவதே அணியின் முதல் இலக்காக உள்ளது.

Story first published: Friday, July 20, 2018, 16:16 [IST]
Other articles published on Jul 20, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+