For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அடடா.. மறுபடியும் வட போச்சே.. சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி பைனல்.. இந்தியாவை வென்றது ஆஸி.!

By Aravinthan R

பிரெடா, நெதர்லாந்து: சாம்பியன்ஸ் ட்ராபி இறுதிப் போட்டியில் இந்திய அணியை மீண்டும் ஒரு முறை வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டத்தை வென்றது.

நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சம நிலையில் இருக்க, இறுதியில் “பெனால்டி ஷூட்அவுட்” முறையில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

2016 சாம்பியன்ஸ் ட்ராபி பைனலிலும், இதே போல பெனால்டி வாய்ப்பில் இந்தியாவை ஆஸ்திரேலியா வென்றது. மீண்டும், அந்த சோக வரலாறு நடந்தேறியுள்ளது. இந்திய வீரர்கள் தங்கள் திறமையை சிறப்பாக வெளிப்படுத்திய போதும், பெனால்டி ஷூட்டில் இந்திய அணி தோற்றது.

 வீணான கோல் வாய்ப்புகள்

வீணான கோல் வாய்ப்புகள்

ஆட்டம் தொடங்கிய பத்து நிமிடங்களுக்குள், இந்திய அணிக்கு இரண்டு பெனால்டி கார்னர் வாய்ப்புகள் கிடைத்தும், அதை கோலாக மாற்ற முடியவில்லை. 13வது நிமிடத்தில் தில்ப்ரீத் சிங், சுனிலுக்கு பந்தை அனுப்ப, கோல் அடிக்க கிடைத்த வாய்ப்பை நழுவ விட்டார் சுனில். கோல் அடிவைல்லை என்றாலும், முதல் பாதியை தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தது இந்திய அணி.

வாய்ப்பை பயன்படுத்திய ஆஸ்திரேலியா

வாய்ப்பை பயன்படுத்திய ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா அணி தனக்கு கிடைத்த முதல் பெனால்டி கார்னரையே, கோலாக மாற்றியது. 24வது நிமிடத்தில், தங்கள் முதல் கோலை எடுத்தது ஆஸ்திரேலியா. பின்னர், 42 வது நிமிடத்தில் இந்தியாவின் விவேக் பிரசாத், ஒரு கோல் அடிக்க, ஆட்டம் 1-1 என்ற சம நிலைக்கு வந்தது. இறுதி வரை, இரு அணிகளும் மேற்கொண்டு கோல் அடிக்காத நிலையில் பெனால்டி ஷூட்அவுட்டில் வெற்றி முடிவு செய்யப்படும் நிலையை எட்டியது ஆட்டம்

பெனால்டி ஷூட்அவுட்

பெனால்டி ஷூட்அவுட்

பெனால்டி ஷூட்அவுட்டில் சொதப்பிய இந்திய வீரர்கள் முதல் மூன்று வாய்ப்புகளில் ஒரு கோல் மட்டுமே அடிக்க, ஆஸ்திரேலியா முதல் மூன்று வாய்ப்புகளிலும் கோல் அடித்து 3-1 என்ற கோல் கணக்கில் இறுதி போட்டியை வென்றது.

 ஆஸ்திரேலியா 15, இந்தியா 0

ஆஸ்திரேலியா 15, இந்தியா 0

இதுவரை சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் ஆஸ்திரேலியா 15 முறை கோப்பை வென்று சாதித்துள்ளது. இந்தியாவோ, ஒருமுறை கூட இறுதிபோட்டியில் வென்றதில்லை. சென்ற முறையும், இந்தியா அணி இரண்டாம் இடத்தையே பிடிக்க முடிந்தது.

Story first published: Monday, July 2, 2018, 14:09 [IST]
Other articles published on Jul 2, 2018
English summary
Australia beat India to win champions trophy consecutively for the second time. India never win champions trophy and the fate continues.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+