For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒலிம்பிக் வரலாற்றில் 13வது பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணி! எந்த அணியும் படைக்காத மாபெரும் சாதனை

பாரிஸ் : ஒலிம்பிக் வரலாற்றில் இந்திய ஹாக்கி அணி தங்களது 13வது பதக்கத்தை கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறது. இதன் மூலம் ஹாக்கி வரலாற்று அதிக பதக்கம் வென்ற அணி என்ற சாதனை இந்தியா தக்க வைத்திருக்கிறது.

தற்போது இந்தியாவில் கிரிக்கெட் மிகவும் பிரபலமான விளையாட்டு இருந்தாலும், ஒரு காலத்தில் ஹாக்கி தான் இந்தியாவின் உயிர் மூச்சாக இருந்தது. ஒலிம்பிக் போட்டியில் ஹாக்கி இந்திய அணி விளையாடினால் நிச்சயம் பதக்கம் என்ற சாதனை இருந்தது.

Olympics 2024 Hockey pr sreejesh 2024

ஒரு காலத்தில் தொடர்ந்து ஆறு முறை தங்க பதக்கத்தை ஒலிம்பிக்கில் வென்று அசத்தியிருக்கிறது. இந்த நிலையில் இந்திய அணி எப்போதெல்லாம் ஹாக்கியில் பதக்கம் வென்று இருக்கிறது என்பது தற்போது பார்க்கலாம். 1928 ஆம் ஆண்டு இந்திய அணி தங்களுடைய முதல் தங்கத்தை தட்டிச் சென்றது. அதேபோன்று 1932 ஒலிம்பிக் 1936 ஒலிம்பிக்கிலும் இந்தியா தங்கப் பதக்கத்தை தட்டி சென்றது.

இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற காலத்தில் ஒலிம்பிக் போட்டிகள் நடக்கவில்லை. இதனால் 12 ஆண்டுகள் இந்திய அணி ஹாக்கியில் சாதிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதை எடுத்து உலகப்போருக்கு பின் மீண்டும் நடைபெற்ற 1948 ஒலிம்பிக்கில் இந்திய அணி சாதித்து அசத்தியது. இதே போன்று 1952 ஒலிம்பிக்கிலும் 56 ஒலிம்பிக்களும் இந்திய அணி தங்கம் வென்றது ஹாக்கியில் அசத்தியது.

சுதந்திரத்திற்கு பிறகு இந்தியா, பாகிஸ்தான் என இரண்டு அணிகளும் தனித்தனியாக பிரிந்து விளையாடுகிறது. அப்போதும் இந்திய அணி மூன்று தங்கப்பதக்கத்தை தொடர்ந்து வென்றது குறிப்பிடத்தக்கது. 1960 ஆம் ஆண்டு ரோமில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகள் தான் ஹாக்கி அணி முதல் தோல்வியை தழுவியது.

இதனை அடுத்து முதல் வெள்ளி பதக்கத்தை இந்தியா கைப்பற்றியது. அதன் பிறகு 1964 ஆம் ஆண்டு நடைபெற்ற ஹாக்கி போட்டியிலும் இந்தியா தங்கத்தை தட்டிச் சென்றது. 1968 மெக்ஸிகோவில் நடைபெற்ற ஒலிம்பிக் தொடரில் இந்தியாவுக்கு வெண்கலம் பதக்கம் கிடைத்தது. இதேபோன்று 1972 ஆம் ஆண்டு இந்தியா வெண்கலத்தை தட்டிச் சென்றது. இதன் பிறகு 1980 ஆம் ஆண்டு மாஸ்கோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியா தங்கம் வென்றது.

அதன்பிறகு இந்தியா இன்றுவரை தங்கம் வெல்லவில்லை என்றாலும் தற்போது தொடர்ந்து இரண்டு முறை வெண்கல பதக்கம் வென்று அசத்தியிருக்கிறது. 2020 ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கிலும், 2024 ஆம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்கிலும் இந்தியா வெண்கலம் வென்று இருக்கிறது. இதன் மூலம் 13 ஒலிம்பிக் பதக்கங்களை இந்தியா கைப்பற்றி இருக்கிறது. 52 ஆண்டுகளுக்குப் பிறகு தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்தியா வெண்கலம் வென்று இருக்கிறது.

Story first published: Thursday, August 8, 2024, 19:44 [IST]
Other articles published on Aug 8, 2024
English summary
India mens Hockey Team Wins 12 medal in olympic History By winning bronze in Paris ஒலிம்பிக் வரலாற்றில் 12வது பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணி! எந்த அணியும் படைக்காத மாபெரும் சாதனை
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+