Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பெண்கள் உலகக் கோப்பை ஹாக்கி.... காலிறுதி வாய்ப்பு கிடைக்குமா... அமெரிக்காவை சந்திக்கிறது இந்தியா!

லண்டன்: பெண்கள் ஹாக்கி உலகக் கோப்பையில் நாளை நடக்கும் கடைசி லீக் ஆட்டத்தில் அமெரிக்காவை சந்திக்கிறது இந்தியா. இதில் வென்றால்தான், காலிறுதிக்கு நுழைவதற்கான வாய்ப்பு கிடைக்கும் நிலை உள்ளது.

16 நாடுகள் பங்கேற்கும் பெண்கள் ஹாக்கி உலகக் கோப்பை போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், இங்கிலாந்து, அமெரிக்கா, அயர்லாந்து ஆகிய அணிகளுடன் பி பிரிவில் இந்தியா இடம்பெற்றுள்ளது.

India in must win situation in the women hockey world cup

முதல் ஆட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியனான இங்கிலாந்தை இந்தியா சந்தித்தது. அந்த ஆட்டம் 1-1 என டிராவானது. அதற்கடுத்த ஆட்டத்தில் அயர்லாந்திடம் 1-0 என தோல்வி அடைந்தது.

முதல் ஆட்டத்தில் அமெரிக்காவை 3-1 என்ற கோல் கணக்கில் வென்ற அயர்லாந்து, இரண்டு வெற்றிகள் மூலம், கால் இறுதிக்கு முதல் அணியாக நுழைந்தது.

4 பிரிவுகளிலும் முதலிடத்தைப் பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு நேரடியாக நுழையும். ஒவ்வொரு பிரிவிலும் 2 மற்றும் 3வது இடத்தைப் பிடிக்கும் அணிகள், பிரிவுகளுக்குள் நடக்கும் ஃபிளே ஆப் சுற்று போட்டியில் விளையாடும். அதில் வெற்றி பெறும் அணிகள் கால் இறுதிக்கு முன்னேறும்.

பி பிரிவில் இங்கிலாந்து 2 புள்ளிகளுடன் உள்ளது. இந்தியா மற்றும் அமெரிக்கா தலா 1 புள்ளியுடன் உள்ளன. கோல் வித்தியாசத்தில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் நாளை இரவு நடக்கும் கடைசி லீக் ஆட்டத்தில் அமெரி்க்காவை சந்திக்கிறது இந்தியா. இந்த ஆட்டத்தில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது. குறைந்தபட்சம் டிரா செய்தால்தான், காலிறுதிக்கு நுழைவதற்கான ஃபிளே ஆப் சுற்று ஆட்டத்தில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும். மற்றொரு லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து, அயர்லாந்து மோதுகின்றன.

Story first published: Saturday, July 28, 2018, 17:41 [IST]
Other articles published on Jul 28, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+